நேரா போய் லவ் சொல்லிட்டேன்.. ஓகே ஆகிடுச்சு.. குண்டை தூக்கி போட்ட லட்சுமி மேனன்..!

நடிகை லட்சுமி மேனன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய முதல் காதல் அனுபவம் குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை பதிவு செய்திருக்கிறார்.

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரிடம், நீங்கள் யாரிடமாவது காதலை வெளிப்படுத்தி இருக்கிறீர்களா..? அல்லது உங்களிடம் யாராவது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்களா..? எப்படி வெளிப்படுத்தினார்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த லட்சுமிமேனன், என்னிடம் யாரும் காதலை வெளிப்படுத்தியது கிடையாது. ஆனால், நான் காதலை வெளிப்படுத்தி இருக்கிறேன். பள்ளியில் படிக்கும்போது ஒருவரை எனக்கு பிடித்திருந்தது.

அவரிடம் நேரா போய் லவ் சொல்லிட்டேன்.. சில நாட்கள் கழித்து அவரும் ஒப்புக் கொண்டார். அதன் பிறகு இருவரும் அடிக்கடி பேசிக் கொள்வது, அடிக்கடி அவுட்டிங் சென்றது இதுபோல எதுவும் நடக்கவில்லை.

அவர் அவருடைய படிப்பில் கவனமாக இருந்தார்.. நான் என்னுடைய படிப்பில் கவனமாக இருந்தேன்… நண்பர்கள் போலவே இருந்தோம்.. எப்போதாவது ஒருமுறைதான் பேசிக் கொள்வோம்.

பள்ளி காலம் முடியும் தருவாயில் தான் அடிக்கடி பேச தொடங்கினோம். தொலைபேசியில் பேச தொடங்கினோம். போர்வையை போற்றிக் கொண்டு அவருடன் நான் ரகசியமாக பேசுவேன்.

வீட்டில் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டை சுற்றி சுற்றி வந்து தொலைபேசியில் பேசி இருக்கிறேன். ஆனால், பள்ளி முடிந்த பிறகு அந்த காதல் காணாமல் போய்விட்டது.

நான் என்னுடைய துறையில் பிஸியாகிவிட்டேன்.. அவர் அவருடைய துறையில் பிஸியாகிவிட்டார்.. தற்பொழுது திருமணமும் செய்து கொண்டிருக்கிறார் என்று தகவல் வந்தது. அவ்வளவுதான்.

திருமணம் பற்றி கேள்வி எழுப்பிய பொழுது.. அதற்கு பதில் அளித்த லட்சுமி மேனன்.. வீட்டில் பார்த்து வைக்கக்கூடிய நபரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருக்கிறார்.

அது காதல் திருமணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா..? என்று கேள்விக்கு, இருக்கலாம் என்று தனக்கே உரிய பாணியில் சிரித்தபடி பதிவு செய்திருக்கிறார் நடிகை லட்சுமி மேனன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version