பள்ளியில் படிக்கும் போதே அதை பண்ணிட்டேன்..!! கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன லட்சுமி மேனன்..!

மலையாளத் திரையுலகில் சிறு வயதிலேயே அறிமுகமாகி தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து, தமிழ் திரை உலகில் நடிக்கக்கூடிய வாய்ப்பை பெற்ற லட்சுமி மேனன் சுந்தரபாண்டியன் என்ற படத்தில் நேர்த்தியான முறையில் நடித்திருப்பார்.

இவரது நடிப்பை முதல் படத்தில் பார்த்த ரசிகர்கள் அவர்களது மனதை பறி கொடுத்ததை அடுத்து கும்கி படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் பிரபுவின் மகனாகிய விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்த லட்சுமி மேனன் காட்டுவாசியாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார் என்று சொல்வதை விட வாழ்ந்து காட்டினார்.

இதனை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் நான் சிவப்பு மனிதன், பாண்டியநாடு போன்ற படங்களில் விஷாலுக்கு ஜோடியாக நடித்ததை அடுத்து இவருக்கும் விஷாலுக்கும் கனெக்சன் என்ற கிசுகிசுக்கள் வெளி வந்தது.

இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் இரு மொழி படங்களில் தீவிரமாக கவனத்தை செலுத்தி வந்த லட்சுமி மேனன் ரெக்க படத்துக்கு பிறகு எங்கு சென்றார் என்று கேட்க கூடிய அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப் போனார்.

தனது கல்வியை தொடர்ந்து கற்க சென்ற இவர் படிப்பை தொடர ஆரம்பித்த பின்னர், புலிகுத்தி பாண்டி படத்தின் மூலம் ரீஎன்றி கொடுத்தார். மேலும் சந்திரமுகி 2 படத்தில் திவ்யாவாக நடித்து அனைவரையும் அசத்தியிருந்தார்.

தற்போது இவர் மலை, சப்தம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதையும், ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில்களை தருவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் சிறு வயதில் நீங்கள் யாரிடமாவது உங்களது காதலை ப்ரபோஸ் செய்திருக்கிறீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதில் அளித்த லட்சுமிமேனன் என்னிடம் இதுவரை யாரும் காதலை ப்ரபோஸ் செய்ததில்லை என்று கூறினார்.

அத்தோடு இவர் பள்ளியில் படிக்கும் போது நேராக சென்று ஒருவரிடம் தனது லவ்வை ப்ரபோஸ் செய்ததாகவும், அதற்கு அவரும் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறியது தான் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு நின்று விடாமல் அவருடன் நான் அடிக்கடி வெளியே செல்வதில்லை. ஆனால் அடிக்கடி பேசுவேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

இந்நிலையில் வீட்டில் பார்க்கும் நபரை திருமணம் செய்வேன் என்று கூறியவர், காதல் திருமணமாக இருக்க வாய்ப்புள்ளதா? என்று கேட்டதற்கு இருக்கலாம் என்று ஒற்றை வரியில் நாணத்தோடு பதில் அளித்து இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version