“அந்த இயக்குனர் என்னை தனியா கூட்டிகிட்டு போய்..” – நடிகை லட்சுமி மேனன் கண்ணீர்..!

கேரளாவில் இருந்து இறக்குமதி செய்து தமிழில் நடிக்கும் நடிகைகள் ஏராளம். அந்த வரிசையில் கேரள மங்கையான நடிகை லக்ஷ்மி மேனன் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

லக்ஷ்மி மேனன் சீரிய நடிப்பை பார்த்து இவர்களது ரசிகர் வட்டாரம் அதிகமானது. கும்கி படத்தில் யதார்த்தமாக மேக்கப் இல்லாமல், காட்டுவாசியாக பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவோடு ஜோடி போட்டு நடித்து அனைவரையும் கவர்ந்து விட்டார்.

இதனை அடுத்து மேற்படிப்புக்காக சில நாட்கள் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த இவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் இவர் சமீபத்தில் சந்திரமுகி 2 படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் போது நடந்த நிகழ்வை தற்போது அனைவர் முன் பகிர்ந்து இருக்கிறார். சந்திரமுகி 2 படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது சில காட்சிகளில் அவர் சரியாக நடிக்கவில்லை என்று இயக்குனர் பி வாசு திட்டி இருக்கிறார். ஏற்கனவே இயக்குனர் பி வாசு யார் இருந்தாலும் கவலைப்படாமல் அந்த இடத்திலேயே திட்டக்கூடிய குணம் கொண்டவர்.

இதனால் அவர் படப்பிடித்து தளத்தில் என்னை திட்டும் போது எனக்கு மிகவும் சங்கடமாக இருப்பதோடு மனநிலையும் சரியாக இருக்காது. எனவே ஒரு முறை நான் அவரிடம் சென்று சார் நான் சரியாக நடிக்கவில்லை என்றால் என்னை தயவு செய்து தனியாக அழைத்துச் சென்று திட்டுங்கள் என்று கூறினேன்.

மேலும் பலர் மத்தியில் என்னை திட்டும் போது எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது என்பதால் தான் தனியாக கூட்டிட்டு சென்று திட்டும் படி கேட்கிறேன் என்று அழுதபடியே கூறி விட்டேன்.

இதனை அடுத்து எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவர் என்னை தனியாக அழைத்துக் கொண்டு போய் என்ன கூற வேண்டுமோ, அதை தெளிவாக கூறுவார். அத்தோடு எப்படி நடிக்க வேண்டும், எப்படி நடிக்க கூடாது என்பதை விரிவாக விளக்கி சொல்லிக் கொடுப்பார்.

மிகவும் பொறுப்பான இயக்குனரான பி. வாசு இயக்குனர் என்பதை விட எனக்கு ஒரு நல்ல ஆசிரியர் என்று தான் நான் கூறுவேன் என அவரது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version