“மைனா நந்தினியின் Back பெருசா இருக்க இது தான் காரணம்.. ஆனால்..” கணவர் யோகேஷ் தடாலடி..!

பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினி குறித்து பெரிதாக அறிமுகம் தேவை இல்லை. உடற்பயிர்சி கூடம் வைத்து நடத்தி வந்த மணிகண்டன் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.

ஒரு கட்டத்தில் இவருடைய முதல் கணவர் சில பிரச்சினைகள் காரணமாக தவறான முடிவு எடுத்துக் கொண்டார். அந்த தவறான முடிவுக்கு பின்னால் காரணமாக இருப்பது மைனா நந்தினி தான் எனது அவருடைய முதல் மாமியாரான மணிகண்டனின் தாயார் கடுமையான புகார்களை கூறியிருந்தார்.

இது மைனா நந்தினியின் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய வடு என்ற கூறலாம். ஆனால் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டும் தற்பொழுது புதிய வாழ்க்கை புதிய குடும்பம் என தன்னுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

இடையில் பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். பொதுவாக பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் விஷயங்கள் குறித்து Youtube உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு இணைய பிரபலங்கள் தங்களுடைய விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

அதேபோல பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை மைனா நந்தினி ஒரு டாஸ்க்கில் கலந்து கொண்டது பற்றியும் அதில் அவர் வெற்றி பெற்றது பற்றியும் அருவருக்கத்தக்க வகையில் யூடியூப் ஒருவர் பேசியிருக்கிறார்.

இதனை பார்த்த மைனா நந்தினியின் கணவரும் நடிகருமான யோகேஸ்வரன் தன்னுடைய பேட்டி ஒன்றில் பதிலடி கொடுத்திருக்கிறார்.

அவர் கூறியதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாராவது கலந்து கொண்டாள் அவர்கள் பொதுவெளியில் விமர்சிக்கப்படுவார்கள். அதனை நான் வரவேற்கிறேன். இன்னும் சொல்லப் போனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் பொதுவெளியில் நம்முடைய செயல்கள் விமர்சிக்கப்படும் என தெரிந்தே தான் போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள் போட்டியாளர்கள்.

அவர்கள் செய்யக்கூடிய செயல்கள் விமர்சிக்கப்படுவது தவறே கிடையாது. அதனை நாங்கள் முழு மனதாக வரவேற்கிறோம். நல்லதோ.. கெட்டதோ.. எதுவாக இருந்தாலும் அதனை நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனா, விமர்சனம் என்ற பெயரில் ஒருவரின் உடலை கேவலமாக சித்தரிப்பதும் அவருடைய உடலை கிண்டல் செய்வது போலவும் பேசினால் அதனை கண்டிப்பாக நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

ஒரு யூட்யூபர் மைனா நந்தினியுடைய பேக் பெரிதாக இருக்கிறது என்று பேசியிருந்தார். அந்த வீடியோவின் கமெண்ட் செக்ஷனில் என்ன கூறியிருக்கிறார்கள் என்று போய் பார்த்தேன் அங்கே பலரும் அவர் பேசியது சரி என்பது போலவே பேசியிருந்தார்கள்.

யாருமே அதற்கு எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. அவர் மைனா நந்தியின் செயல்களை விமர்சிக்கட்டும். தவறு கிடையாது. ஆனால், அவருடைய உடலை இழிவு படுத்துவது போலவும் கிண்டல் செய்வது போலவும் பேசினால் பொறுமையாக இருக்க முடியாது.

நான் இந்த வீடியோ மூலமாக அவருக்கு எச்சரிக்கை எடுத்துக் கொள்கிறேன். இதுபோல் இனிமேல் நடக்கக்கூடாது எனக் கூறியிருந்தார்.

மைனா நந்தினியின் பேக் பெரிதாக இருக்கிறது என்றால் அது அவருடைய ஜீன் அவருடைய மரபணு சார்ந்து வரக்கூடியது. ஆனால், இதையெல்லாம் ஒரு கிண்டலாக பாடி ஷேமிங் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் விமர்சனம் என்ற பெயரில் இது போன்ற விஷயங்களை செய்வதை தவிக்க வேண்டும் என்று பதிலடி கொடுத்துள்ளார் யோகேஷ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version