பாலியல் புகார் எழுந்த பிறகு சீனு ராமசாமி இதற்கு அழைத்தார்.. குண்டை தூக்கி போட்ட மனிஷா யாதவ்..!

பிரபல நடிகை மனிஷா யாதவ் இடம் பொருள் ஏவல் என்ற திரைப்படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி என்னை நடத்திய விதம் சரியில்லாத காரணத்தினால் அந்த படத்தில் அவருடன் பணியாற்ற எனக்கு விருப்பமில்லை.

அவர் செய்யும் அனைத்துக்கும் நான் உடன்படவில்லை என்பதால் என்னை இடம் பொருள் ஏவல் படத்திலிருந்து நீக்கிவிட்டார் என்று கூறியிருந்தார்.

இதற்கு முன்பாக பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தன்னுடைய வீடியோ ஒன்றில் மனிஷா யாதவிற்க்கு இயக்குனர் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பேசியிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தரமான படங்களை கொடுத்துக் கொண்டிருந்த சீனு ராமசாமியா இப்படி சக நடிகையிடம் நடந்து கொண்டது என ரசிகர்கள் பலரும் அதிர்ந்து போனார்கள்.

இந்த விவகாரத்தை திசை திருப்பவும் நீர்த்து போக செய்யவும் சீனு ராமசாமி நேரடியாகவும் மறைமுகமாகவும் பல விஷயங்களை செய்திருக்கிறார் என்று நெருங்கிய சினிமா வட்டாரங்கள் வருகிறது.

உச்சகட்டமாக தன்னுடைய சமூகவளைத்தள பக்கத்தில் நடிகை மனிஷா யாதவ் பேசியிருந்த பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டு, என் மீது புகார் கூறுபவர்கள் பாருங்கள்.. நடிகை மனிஷா யாதவ் எனக்கு நன்றி கூறுகிறார்.

தன்னிடம் தவறாக நடந்து கொண்ட யாராவது மேடையிலேயே நன்றி கூறுவார்களா..? என்பது போல ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். இதனை பார்த்து கடுப்பாகிய நடிகை மனிஷா யாதவ், மேடை நாகரீகம் கருதியே அந்த மேடையில் இருந்த உங்களுக்கு நான் நன்றி தெரிவித்தேன். தவிர வேறு எதுவும் காரணம் கிடையாது.

மேடையில் இருந்த மற்றவர்களுக்கு எப்படி நன்றி தெரிவித்தேனோ. அந்த வரிசையில், உங்களுக்கும் நன்றி தெரிவித்தேன்.. நீங்கள் செய்ததை நான் தவறு என நினைக்கவில்லை என்று நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது.

உங்கள் தவறை திருத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய உண்மையை உணருங்கள் என்று ஸ்டேட்டஸ் வைத்திருந்தார் நடிகை மனிஷா யாதவ்.

இந்நிலையில், இப்படியான புகார்கள் எழுந்ததை தொடர்ந்து நடிகை மனிஷா யாதவை மீண்டும் தன்னுடைய பணத்தில் நடிக்க அழைத்திருக்கிறார் சீனு ராமசாமி.

இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் நடிகை மனிஷா யாதவ். இந்த விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே செல்கிறது.

நடிகை மனிஷா யாதவ் மற்றும் இயக்குனர் ராமசாமி இருவரும் நேரடியாக விளக்கம் கொடுத்தால் மட்டுமே இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவு கிடைக்கும் இல்லையென்றால் இயக்குனர் சீனு ராமசாமியின் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகும் என்பது உறுதி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version