நவரச நாயகன் கார்த்திக்கின் மகனாகிய கௌதம் கார்த்திக் கடல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இவர் தன்னோடு இணைந்து நடித்த மலையாள நடிகையான மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்ட இவர்களை திரையுலக பிரபலங்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வாழ்த்தியிருக்கிறார்கள்.
இவரின் திருமணத்தின் போது மஞ்சிமாவின் உடல் எடை குறித்து உருவ கேலியை பலரும் செய்திருந்தார்கள். அதற்கெல்லாம் பதிலடி தரக்கூடிய வகையில் தற்போது மஞ்சிமா மோகன் தனது உடல் எடையை கணிசமாக குறைத்து இருக்கிறார்.
தனது மனைவியின் உடலை பலரும் கேலி செய்ததை அடுத்து கௌதம் கார்த்திக்கு மன வருத்தம் ஏற்பட்டது. இதனால் திருமணம் முடிந்த கையோடு இருவரும் ஹனிமூன் செல்லாமல் உடல் எடையை குறைக்கக்கூடிய முயற்சியில் இறங்கி தற்போது அதில் வெற்றி கண்டிருக்கிறார்.
தன்னை கேலி செய்தவர்களுக்கு தக்க பதில் கொடுக்கக்கூடிய வகையில் சமீபத்தில் இன்ஸ்டன்ட் கிராம் பக்கத்தில் மஞ்சிமா மோகன் வெளியிட்டு இருந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நேர்த்தியான முறையில் இருந்தது.
இந்த சூழ்நிலையில் மஞ்சிமா மோகன் வேதனையான சம்பவம் ஒன்றை தற்போது அனைவர் முன் பகிர்ந்து இருக்கிறார். இதில் சில யூடியூப் சேனல்கள் மக்களுக்கு உண்மையிலேயே பயன் உள்ளதாக உள்ளது என்ற கருத்தை தெரிவித்தார்.
அத்தோடு சில சேனல்கள் தவறான தகவல்களை பரப்பி வருவதாக கூறியிருக்கும் அவர் குறிப்பாக உங்களைப் பற்றி நல்லது கூற வேண்டும் என்றால் நீங்கள் அவர்களுக்கு பணம் தர வேண்டும் என்ற ஷாக்கிங் தகவலை தெரிவித்து இருப்பதோடு அப்படி பணம் தரவில்லை என்றால் கேவலமாக விமர்சிக்க கூடியவர்கள் என்பதை பதிவு செய்திருக்கிறார்.
மேலும் மற்றவர்களது செயல்களை விமர்சிக்க கூடிய உரிமை ஒவ்வொருவருக்கும் உள்ளது. எனினும் லைக் பெறுவதற்காக தவறானவற்றை பேசி மரியாதை அற்ற செயல்களை செய்வது மிகவும் தவறானது என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
தற்போது இந்த பதிவு தான் ரசிகர்களின் மத்தியில் பெரும் அளவு பேசும் பொருளாகி விட்டது. அவர் கூறியிருப்பதில் நியாயம் உள்ளது என்பதை பலரும் கூறி வருவது சிறப்பான ஒன்றாகும்.