எதனால் கணவரை விவாகரத்து செய்தீர்கள்..? சிரித்த முகத்துடன் மஞ்சு வாரியர் கொடுத்த ஷாக் பதில்..!

திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகள் திருமணம் செய்து கொண்ட கையோடு விவாகரத்தும் பெறுகின்ற பெரும் நிகழ்வுகள் தொன்று தொட்டு நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை மஞ்சு வாரியர் தான் திருமணம் செய்து கொண்ட மலையாள நடிகர் திலீபை விட்டு பிரிய காரணம் என்ன என்பது குறித்து கூறிய விஷயம் பற்றி எந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மஞ்சு வாரியர்..

நடிகை மஞ்சு வாரியர் தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். எனினும் இவரது பூர்வீகம் கேரள தேசமாகும். இவர் மலையாள படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் படத்திலும் நடித்திருக்கிறார். மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

இவர் சாட்சியம் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்த பிறகு பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் சல்லாபம், தூவல், கொட்டாரம் ,களியாட்டம் போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியவர்.

இவரது சிறப்பான நடிப்பை பாராட்டி இந்திய தேசிய திரைப்பட சிறப்பு விருந்தையும், சிறந்த நடிகைக்கான கேரளா அரசின் விருதையும், பிலிம் பேர் விருதையும் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய தீலீபை திருமணம் செய்து கொண்ட இவர் சில கருத்து வேற்றுமையின் காரணத்தாலும், வேறொரு பெண்ணோடு தன் கணவர் தொடர்பில் இருக்கிறார் என்ற உண்மையை அறிந்து கொண்ட பின்னர் 2014 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுவிட்டார்.

விவாகரத்து ஏன்..?

இதனை அடுத்து நடிகர் தீலீப் காதலித்து வந்த மற்றொரு நடிகையை திருமணம் செய்து கொண்டார். இந்த விஷயம் உங்கள் அனைவருக்குமே மிக நன்றாக தெரியும்.

அந்த வகையில் நடிகை மஞ்சுவாரியர் தற்போது தன் மகளோடு தனித்து வாழ்ந்து வரும் நிலையில் அண்மையில் கூட தமிழில் தல அஜித் நடிப்பில் வெளி வந்த துணிவு படத்தில் ஆக்ஷன் ஹீரோயினியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார்.

தற்போது 45 வயதில் இவ்வளவு இளமையான நடிகையாக காட்சியளிக்கும் நடிகை மஞ்சு வாரியார் பன்முக திறமையைக் கொண்டிருந்தாலும், நிஜ வாழ்க்கையில் ஜொலிக்க முடியாமல் போய்விட்டது.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் மஞ்சு வாரியர் இடம் எதனால் நீங்கள் கணவரை விவாகரத்து செய்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிரித்தபடியே அவர் தன்னுடைய பதிலை கொடுத்திருக்கிறார். அந்த பதிலில் அவர் கூறியதாவது அது என்ன காரணம் என்று கூறுவதால் எந்த நல்லதும் நடக்கப் போவதில்லை.

மாறாக எனக்கு அது வேதனையை தான் கொடுக்கும். எனவே அந்த காரணத்தை வெளியில் சொல்லாமல் தவிர்த்து விடுகிறேன். இது எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் வேதனை தரக்கூடியதாக இருக்கும். எனவே அதற்கு உண்டான காரணத்தை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை.

விவாகரத்தில் பெற்ற பிறகும் நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். அப்படியே இருக்கட்டும் என சிரித்தபடி தன்னுடைய பதிலை மஞ்சு வாரியர் கொடுத்திருக்கிறார். இந்த பேச்சானது தற்போது இணையங்களில் வைரலாக மாறிவிட்டது.

இதைக்கேட்ட ரசிகர்கள் இதனால் இவருக்கு அதிக அளவில் மன உளைச்சல் ஏற்படும். எனவே இது போன்ற கேள்விகளை இனி கேட்காமல் தவிப்பது நல்லது என்பதை கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version