“குடும்ப நண்பருடன் இரண்டாம் திருமணம்..?” இதற்காகத்தான்.. நடிகை மீனா கூறிய பதில்..!

கண்ணழகி மீனா குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் ஜொலிக்க ஆரம்பித்தவர். மேலும் தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் முக்கிய முன்னணி நடிகர்களோடு நடித்தவர்.

90-களில் பிரபலமான நடிகையாக இருந்தவர், 2009-ஆம் ஆண்டு தொழில் அதிபர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். மிகவும் சிறப்பான முறையில் சென்று கொண்டிருந்த இவரது வாழ்க்கையை கொரோனா புரட்டி போட்டது.

கொரோனா காலகட்டத்தில் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட தனது கணவர் சிகிச்சை பலனில்லாமல் 2022-ஆம் ஆண்டு இறந்து விடுகிறார். கணவனின் இழப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்து மீனாவை செயலிழக்க வைத்தது.

இதனை அடுத்து தோழிகள் கொடுத்த தைரியத்தால் அந்த துக்கத்திலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக வெளியே வந்து மீண்டும் நடிப்பதில் தற்போது கவனத்தை செலுத்தி வருகிறார். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சின்னத்திரைகளில் நடுவராகவும் செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மீனாவிடம் இரண்டாவது திருமணம் பற்றி பல்வேறு விதமான கேள்விகளை கேட்டிருந்தார்கள். அந்தக் கேள்விக்கு பதில் அளித்த மீனா கணவர் இறந்து ஒன்றை ஆண்டுகள் ஆகும் நிலையில் என்னால் இன்னும் அவரது நினைவில் இருந்து வெளியே வர முடியவில்லை.

மேலும் நடிப்பு துறையில் இருக்கும் ஒரு ஹீரோயினி தனியாக இருந்தாலே பல வதந்திகளும், கிசுகிசுகளும் ஏற்படுவது இயற்கை தான். இந்த மாதிரியான வதந்திகள் என்னுடைய குடும்பத்தை நிச்சயமாக பாதிக்காது.

நானும் எனது மகளும் தற்போது கணவர் இறந்த துக்கத்தில் இருந்து மீண்டு எதார்த்த வாழ்க்கையை நோக்கி நகர்ந்து வரும் வேளையில் இது போன்ற கேள்விகள் தேவையில்லாதது. என் மகள் இருக்கும் சூழலில் மறுமணம் என்பது அவளையும் சார்ந்தது என்ற கருத்தை மீனா கூறி இருக்கிறார்.

தற்போது இந்த பேச்சானது ரசிகர்களின் மத்தியில் பெரிதளவு பேசப்பட்டு வருவதோடு மீனா சொன்ன பதில் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் உள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version