GOAT பட நடிகரை இரண்டாம் திருமணம் செய்யும் நடிகை மீனா..? தீயாய் பரவும் தகவல்..! உண்மை என்ன..?

கண்ணழகி மீனா 90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை பெற்றிருப்பவர்.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர் ரஜினியை ரஜினி அங்கிள் என்று அழைத்த வாயாலயே மாமா.. என்று ஹீரோயினியாக சூப்பர் ஸ்டார் ரஜினியோடு இணைந்து நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர்.

GOAT படம்..

நடிகை மீனா தளபதி விஜய் உடன் இணைந்து சரக்கு வச்சிருக்கேன்.. இறக்கி வச்சிருக்கேன்.. என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களின் வாயை பிளக்க வைத்தவர்.

இதனை அடுத்து அண்மையில் லியோ படத்தில் தளபதி விஜய் நடிக்கும் போதே விஜய் மற்றும் வெங்கட் பிரபுவும் இணைந்து புதிய படம் ஒன்றில் கலக்கப்போகிறார்கள் என்ற செய்திகள் வெளி வந்தது.

மேலும் இந்த படத்துக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு சற்று புதுமையாகவே இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்தார்கள். இதை அடுத்து GOAT – கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் பற்றிய தகவல்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த படத்தில் பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா என பல நட்சத்திரங்கள் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார்கள்.

இரண்டாம் திருமணம் செய்யும் நடிகை மீனா..

இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் நடிகை மீனா தனது கணவர் வித்யாசாகர் இழந்தது அனைவருக்குமே தெரியும். இதனை அடுத்து கணவர் இழந்த துயரம் தாங்காமல் மீனா கடுமையாக மன அளவில் பாதிக்கப்பட்டார்.

அந்தத் துயரிலிருந்து தற்போது தனது தோழிகளின் மூலம் வெளி வந்திருக்கும் மீனா சினிமா மற்றும் சீரியல்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

ஏற்கனவே இவர் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது பல்வேறு கிசுகிசுகளுக்கு ஆளானவர், பெற்றோர் பார்த்த வரனைத்தான் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

இந்நிலையில் இவர் விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அதற்கு அவர் தயாராகி வருவதாகவும், இணையங்களில் அடிக்கடி செய்திகள் வந்த போதும் அவற்றையெல்லாம் மீனா மறுத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது மீண்டும் மீனா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டார். இவர் பிரபல நடிகர் பிரசாந்தைத்தான் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் பிரசாந்தும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். தற்போது விஜயின் கோட் திரைப்படத்தில் இணைந்து நடிக்கிறார். இது இவரது இரண்டாவது இன்னிங்சுக்கு பொருத்தமான படமாக இருக்கும் என்று பலரும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

சினிமாவில் ஆரம்ப காலத்தில் வெற்றி நாயகனாகவும், சாக்லேட் பாயாகவும் நடித்த பிரசாந்த் தற்போது நடிகை மீனாவுடன் இரண்டாவது திருமணம் நடக்க இருக்கும் தகவல் இணையத்தில் தீயாய் பரவுகிறது.

எனினும் இந்த தகவல் உண்மையானதா? என்ன என்பது எவருக்கும் தெரியவில்லை. இதனை அடுத்து ஆழ்ந்த குழப்பத்தில் இருக்கும் ரசிகர்கள் இது சாத்தியமா? இல்லையா? என்று அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

எனவே நடிகை மீனா அல்லது பிரசாந்த் தரப்பில் இருந்து இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த தகவலும் வதந்தியாக தான் இருக்கக்கூடும் என ரசிகர்கள் உறுதியாக நம்பி அவர்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் சில காலமாகவே இது போல இரண்டாவது திருமணம் குறித்து மீனாவை இணைத்து பல்வேறு கிசுகிசுக்கள் வெளி வருவதை சுட்டிக்காட்டி இதுவும் அது போலத்தான் இருக்கும் என்பதை கணித்து விட்டார்கள்.

எனவே இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் நடிகர் பிரசாந்த் அல்லது நடிகை மீனா இதற்குரிய பதிலை தெரிவிப்பது அவசியமாகும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version