குக்கிராமத்திற்கு கூட்டி சென்று கொடுமை.. குழந்தை இருக்குன்னு சொல்லியும் விடல.. ஆனால்.. குமுறும் நடிகை மீனா..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை ரஜினி அங்கிள் என்று அழைத்து அவரோடு பின்னால் ஹீரோயினியாக இணைந்து நடித்துக் கலக்கிய நடிகை மீனா பற்றி அதிகம் கூற வேண்டாம்.

கண்ணழகி மீனா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து ரசிகர்கள் விரும்பும் நாயகியாகவும் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தவர்.

திரிஷ்யம் படத்தில் மீனா..

தமிழ் திரைப்படங்களான அரிச்சந்திரா, அவ்வை சண்முகி, அன்புடன், அன்புள்ள ரஜினிகாந்த், ஆளுக்கு ஒரு ஆசை, ஆனந்த பூங்காற்றே, உயிரே உனக்காக, என் ராசாவின் மனசிலே, எஜமான், ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சிட்டிசன், செங்கோட்டை, நம்ம வீட்டு கல்யாணம், நாடோடி மன்னன், பாரதி கண்ணம்மா, பாறை, பெரியண்ணா பொற்காலம், மாமன் மகள், முத்து, ராஜகுமாரன், வானத்தைப்போல, வெற்றி கொடி கட்டு போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று சிம்மாசனத்தை போட்டு அமர்ந்து கொண்டவர்.

இவர் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதினை 1993 ஆம் ஆண்டு பெற்றவர் அதனை அடுத்து 2002 ஆம் ஆண்டு மீனாவிற்கு மீண்டும் இந்த விருது கிடைத்தது. 1997-ல் ஃபிலிம் ஃபேர் விருதினை பெற்ற மீனா பல விருதுகளுக்கு சொந்தக்காரி.

திரையுலகில் படு பிஸியான நடிகையான  இவரை பற்றி எந்தவித கிசுகிசுகளும் அதிக அளவு ஏற்பட்டது இல்லை. அந்தளவு தான் உண்டு தன் பணி உண்டு என்று சிறப்பாக சினிமாவில் மட்டுமே கவனத்தை செலுத்தியவர்.

எனினும் ஒரு காலகட்டத்தில் இவர் நடன இயக்குனர் மற்றும் நடிகரான பிரபுதேவாவை காதலித்து வந்ததாகவும் இதனை அடுத்து இவரது தோழிகள் பிரபுதேவாவின் உண்மை குணத்தை தோல் உரித்து காட்டியதை அடுத்து அந்தக் காதலை பிரேக் அப் செய்து தன் பெற்றோர் பார்த்த வரனை திருமணம் செய்து கொண்டார்.

மிகவும் சிறப்பாக சென்று கொண்டிருந்த இவரது மண வாழ்க்கை ஊரடங்கு கால கட்டத்தில் தன் கணவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு இறந்துவிட மிகவும் சோகத்தில் மூழ்கினார். இதனை அடுத்து தற்போது அந்த சோகத்தில் இருந்து வெளி வந்து இருக்கக்கூடிய இவர் தன்னை போலவே தன் மகள் நைனிகாவை தெறி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார்.

இதனை அடுத்து இவர் மலையாள திரைப்படமான திரிஷ்யம் படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவத்தை அண்மை பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்

குழந்தை இருக்கு.. ஆனாலும் விடல..

இந்த பேட்டியில் இவரை குக்கிராமத்திற்கு அழைத்துச் சென்று கொடுமைப்படுத்தியதாகவும் குழந்தை இருக்கு என்று சொல்லியும் விடவில்லை என்று குமுறி இருக்கிறார்.

அத்தோடு குழந்தைக்கு இரண்டு மாதம் தான் ஆகிறது கை குழந்தையை வைத்துக்கொண்டு எப்படி நான் படத்தில் நடிப்பது எனக்கேட்க பட குழுவோ அது பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம் என்று கூறினார்கள்.

அதுமட்டுமல்லாமல் அந்த படத்தில் நான் நடித்தால் தான் மிகவும் சிறப்பாக இருக்கும் என கூறினார்கள். மோகன்லால் படம் என்பதால் மலையாளத்தில் மாஸாக இருக்கும் என நினைத்து ஒப்புக்கொண்டு அந்தப் படத்தில் நடித்தேன்.

மேலும் அந்த படத்தில் நடிக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் இணைய வசதி கூட இல்லை. அப்படிப்பட்ட ஒரு கிராமத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அத்துடன் படப்பிடிப்பு முடியும் வரை கொடுமையான ஒரு அனுபவமாக அது இருந்தது.

ஆனால் எனக்கும் என் குழந்தைக்கும் தேவையான அனைத்து விஷயங்களும் எங்களுக்கு உடனடியாக கிடைத்தது. எனினும் படப்பிடிப்பு எப்போது முடியும் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன்.

கைக்குழந்தை இருக்கிறது என்று கூறியும் விடாமல் வற்புறுத்தி என்னை அந்த படத்தில் நடிக்க வைக்க சம்மதம் வாங்கி விட்டார்கள். படம் வெளியான பிறகு எனக்கு இருந்த அந்த வருத்தம் எல்லாம் அந்த நொடியிலேயே போய்விட்டது. அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் திரிஷ்யம் படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இதனை அடுத்து நான் பட குழுவிற்கு மோகன்லால் சாருக்கும் என்னுடைய நன்றிகளை மனதார கூறி இருந்தேன் என்று மீனா கூறிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version