“என் உதட்டை சுவைக்க போறாங்க..” கேரவேனில் கதறிய மீனா..! என்ன நடந்தது..?

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகம் ஆகி ரஜினி, கமல், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு 90-களில் கலக்கிய நடிகை மீனாவைப் பற்றி உங்களுக்கு அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இவர் “நெஞ்சங்கள்” என்ற திரைப்படத்தில் சிறுமையாக சிவாஜி கணேசன் உடன் நடித்தார். அதனை அடுத்து “அன்புள்ள ரஜினிகாந்த்” படத்தில் ரஜினியை ரஜினி அங்கிள் என்று அழைத்தவர், பின்னால் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

குறிப்பாக “எஜமான்” படத்தில் ரஜினியோடு இணைந்து நடித்து இருந்த நடிப்பை எவராலும் மறக்க முடியாது. இதனை அடுத்து தமிழில் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த மீனா தென்னிந்திய நடிகைகளில் மிகச் சிறந்த நடிகையாக விளங்கினார்.

மேலும் ஊரடங்கு காலத்தில் தனது கணவரை பறி கொடுத்தவர் மீளா துயரில் இருந்தார். இதனை அடுத்து தோழிகள் கொடுத்த ஆதரவால் தற்போது சினிமாவில் கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து வரக்கூடிய இவர் தனது 40 ஆண்டு கால திரை உலக வாழ்க்கைக்கான பாராட்டு விழாவை எடுத்த நிலையில் பலரும் இவரை பற்றி விஷயங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

இவர் கமலஹாசன் “அவ்வை சண்முகி” என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். அந்த அனுபவம் பற்றி தற்போது பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். கமல் படங்கள் என்றாலே முத்தக் காட்சிகள் அதிகளவு இருக்கும். ஆனால் “அவ்வை சண்முகி” படத்தில் அப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தின் இரண்டாவது நாளில் உதவி இயக்குனர் முத்த காட்சி குறித்து தன்னிடம் பேசியதால், கேரவனில் இருக்கும் போது தன்னுடைய தாயிடம் இதைக் கூறி அழுததாக மீனா பேட்டியில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் இந்த காட்சிகளை எப்படி செய்வது என்று தெரியாமல் பயந்து இருந்த போது தன் தாயிடம் இதெல்லாம் செய்ய முடியாது என்று டைரக்டருடன் சொல்லுங்கள் என்று கதறி இருக்கிறார்.

மறுநாள் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற நிலையில் அங்கு வந்திருந்த கமலஹாசன் இந்த படத்தில் லிப் லாக் காட்சிகள் இல்லை என்று கூறியதை அடுத்து இவருக்கு நிம்மதி ஏற்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

இவ்வளவு பெரிய நடிகை எதற்கு பயந்து இருக்கிறார், எப்படி அழுது இருக்கிறார் என்று ரசிகர்கள் ஒவ்வொரு வரும் பேசி வருவதோடு, அவ்வை சண்முகி படத்தில் மீனாவின் நடிப்பு பிரமிக்க தக்க வகையில் இருந்ததாகவும் கூறி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version