Mysskin : பட்டுப்புடவையில் தேவதை போல் மிஷ்கின் மகள்..! வைரலாகும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக கவனிக்கப்படுபவர் டைரக்டர் மிஷ்கின். கடந்த 2006ம் ஆண்டில் வெளியான சித்திரம் பேசுதடி தான் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முதல் படம்.

நரேன், பாவனா நடித்திருந்த இந்த படத்தில், வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் பட்டிதொட்டியெங்கும் அப்போது பிரபலமான பாடலாக ஒலித்தது.

அடுத்து 2008ம் ஆண்டில், மீண்டும் நரேன் ஹீரோவாக நடித்த அஞ்சாதே படம் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி, பலத்த வரவேற்பை பெற்றது.

இளம் பெண்களை கடத்தி பணம் பறிக்கும் பிளாக்மெயிலர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் செம திரில்லிங் ஆக இருந்தது.

இந்த படத்துக்கு பிறகு நந்தலாலா என்ற படத்தை இயக்கி, அதில் கதையின் நாயகனாகவும் மாறுபட்ட தன் நடிப்பை மிஷ்கின் வெளிப்படுத்தி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அடுத்து யுத்தம் செய், முகமூடி, துப்பறிவாளன், பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சைக்கோ என பல படங்கள் மிஷ்கினுக்கு பெயர் சொல்லும்படியாக நல்ல படங்களாக இருந்தன.

இப்போது விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் என்ற படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். இந்த படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், கோவில் ஒன்றின் முன்பு தன் மகளுடன் மிஷ்கின் இருக்கும் ஒரு புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆரஞ்சுநிற பட்டுப்புடவையில் செழுமையான அழகில், மிஷ்கின் மகள் மிக அழகாக இருக்கிறார்.

சினிமா நடிகைகளுக்கே சவால் விடும் விடும் அழகில் மிஷ்கின் மகள் ஜொலிக்கிறார் என பலரும் பாராட்டி வருகின்றனர். பட்டுப்புடவையில் தேவதை போல இருக்கும் மிஷ்கின் மகள் புகைப்படம் செம வைரலாகி வருகிறது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Exit mobile version