என்னை அடிமை போல கொடுமை செய்தார்.. முன்னணி இயக்குநர் குறித்து ஜி.வி.பிரகாஷ் பகீர் புகார்..!

தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக அறிமுகமானவர். ஆனால் பல படங்களில் நல்ல கேரக்டர்களில் நடித்து ஒரு நல்ல நடிகராகவும் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

மிக விரைவில், இந்தி பட டைரக்டர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், வெப் சீரிஸ் ஒன்றில் கதாநாயகனாக ஜிவி பிரகாஷ் நடிக்க இருக்கிறார்.

தமிழில் ஜெயில், நாச்சியார், குப்பத்து ராஜா, செம, சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் நடித்து அசத்தியிருந்தார். இவரது தங்கை, விடுதலை 1 படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கிய சில படங்களுக்கு, ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். அப்போது அவருடன் பணிபுரிந்த விஷயங்களை, சுவாரசியமாக பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ஜிவி பிரகாஷ் கூறுகையில், என்னை அடிமையாக வைச்சிருந்தாங்க, ஸ்டுடியோவில். ஆயிரத்தில் ஒருவன் படம் பண்ணினப்போ, யப்பா, என்னால் மறக்க முடியாது. நாலு நாள் ஸ்டுடியோவிலேயே கிடந்தேன்.

அவரும் (டைரக்டர் செல்வராகவன்) போக மாட்டேன்கிறார். இருடா வாசிக்கலாம். தயவு செஞ்சு போங்க. நான் வாசிச்சு வைக்கிறேங்க. தயவு செஞ்சு போங்க. அப்படீன்னு சொல்வேன். அப்புறம் கூடவே இருந்து ஒர்க் பண்ணி, யப்பா மயக்கம் என்ன படம் எல்லாம் நாலு நாளில் வாசிச்சு கொடுத்தேன்.

போகவே மாட்டார். நான் இங்குதான் இருப்பேன். ,நீ வாசி. ஓகே ஓகே பிரதர் வாசிக்கறேன்னு சொல்லி நாலு நாளில் வாசிச்சதுதான் அந்த படம்.

அப்போ பர்ஸ்ட் வந்த தீம்ல வந்ததுதான் எல்லாமே மேஜிக். அப்போ என்ன வந்ததோ அதுதான் மியூசிக். அந்த நாலு நாள் மேஜிக். இப்படி என்னை அடிமை போல கொடுமை செய்தவர்தான் இயக்குநர் செல்வராகவன் என்று பேசி இருக்கிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version