பீரியட்ஸ் நேரத்தில் 20 நாப்கின்.. அதனால் தான் அவன் இப்படி பண்ணான்.. ரகசியம் உடைத்த மைனா நந்தினி..!

இந்த உலகில் பிறந்திருக்கும் அத்தனை பெண்களுக்கும் மாதவிடாய் காலத்தில் ஏற்படுகின்ற துன்பங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது அப்படி தனது பீரியட்ஸ் டைமில் நிகழ்ந்த சம்பவத்தின் ரகசியத்தை மைனா நந்தினி வெளிப்படையாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மைனா நந்தினி..!

இந்த மைனா நந்தினி வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்.

இதனை அடுத்து இவர் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டியராஜன் மூலம் வம்சம் என்ற படத்தில் மீண்டும் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் பேசிய மலர் புள்ள என்ற குரல் மீம்ஸ்களில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது.

இதனை அடுத்து இவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, வெள்ளைக்கார துரை, ரோமியோ ஜூலியட் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் வெளிவந்த சரவணன் மீனாட்சி சீசன் மூன்றில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

தொடர்ந்து சீரியல்களிலும் கலக்கி வந்த இவர் அமுதா ஒரு ஆச்சரிய குறி, பாண்டியன் ஸ்டோர்ஸ், அரண்மனை கிளி, சின்னத்தம்பி போன்ற தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

அதனால தான் இப்படி பண்ணான்..

ஆரம்ப காலத்தில் டாஸ்கி ஸ்கின் அழகியாக இருந்த இவர் எப்படி வெள்ளை வெளேர் என்று அழகானார் என்பதை பற்றி போற்ற பதிவு பலருக்கும் பயன் உள்ளதாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அவரது நிறத்திற்கான ரகசியமும் பலருக்கும் தெரிந்து அவர்களும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

இந்நிலையில் பீரியட்ஸ் டைமில் நடந்த ஒரு நிகழ்வை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் இதனால் தான் இந்த நிலை ஏற்பட்டது என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார்.

அந்த வகையில் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட போது இவர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் ஏற்பட்ட போது அதற்கான சரியான பதில் இதுதான் என்பதை தற்போது விளக்கி இருக்கிறார் நடிகை மைனா நந்தினி.

நடிகை மைனா நந்தினி பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட சமயத்தில் ஒரு முறை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தம்பி மற்றும் சக பிக் பாஸ் போட்டியாளரான மணிகண்டன் இவருக்கு உதவி செய்ததாகவும் இருவரும் இணைந்து விளையாடுகிறார்கள் என்ற பெருத்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

அவர் எனக்காக எதற்கு உதவி செய்தார் என்பது பலருக்கும் தெரியாது. அந்த சமயத்தில் பீரியட்ஸ் ஏற்பட்டிருந்த காரணத்தால் கடுமையான உதிரப்போக்கின் காரணமாக சிரமப்பட்டு வந்த நான் சுமார் 20 நாக்கின்களுக்கு மேல் பயன்படுத்திய நிலையில் இருந்தேன்.

அந்த சமயத்தில் தான் எனது நிலையை உணர்ந்து கொண்டு அவர்கள் எனக்கு உதவி செய்தார்களே தவிர மற்றபடி அடுத்தவர்களை தோற்கடிக்க வேண்டும் என இருவரும் சேர்ந்து சதி செய்தோம் என்று எண்ணுவதெல்லாம் மிகவும் தவறு அதில் உண்மை கிடையாது என்கின்ற கருத்தை தற்போது கூறிவிட்டார்.

இந்த பேச்சு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் அனைவரது ஆச்சரியத்தையும் கவனத்தையும் திருப்பி உள்ளது என கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version