அம்மாவை மிஞ்சும் அழகில் நதியாவின் மகள்கள்..! குவியும் லைக்குகள்..!

நடிகை நதியா, தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர். கடந்த 1980, 90களில் நதியா நடித்த படங்கள் என்றாலே தனி வரவேற்பு இருந்தது.

மலையாள படங்களில் நடித்த நதியா, தமிழில் 1985ல் வெளியான பூவே பூச்சூடவா என்ற படத்தில் அறிமுகமானார்.

தொடர்ந்து ராஜாதி ராஜா, சின்னதம்பி பெரிய தம்பி, மந்திர புன்னகை, அன்புள்ள அப்பா, பாடு நிலாவே, உயிரே உனக்காக போன்ற பல ஹிட் படங்களில் நடித்தார்.

ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், ரகுமான், மோகன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தார். ஆனால் கேரக்டர்களை தேர்வு செய்து நடித்தார்.

அதன்பின் 1988ம் ஆண்டில் சிரீஸ் காட்போல் என்பவரை நதியா, திருமணம் செய்துக்கொண்டார். அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.

நதியா..

வழக்கமாக பல நடிகைகள் குறிப்பிட்ட வயதை கடந்துவிட்டால் அம்மா, அக்கா கேரக்டர்களில் சீரியல்களில் நடிக்க போய்விடுவர்.

ஆனால் இன்னும் இளமை மாறாமல் இருக்கும் நதியா மீண்டும் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து சண்ட, தாமிரபரணி, எல்ஜிஎம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

அதைவிட நிறைய விளம்பரங்களில் நதியா தற்போது நடித்து வருகிறார். நகைக்கடை, ஜவுளிக்கடை, பர்னிச்சர் கடை நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அவரை விளம்பர படங்களில் நடிக்க வைக்கின்றன.

நதியாவின் வாரிசுகள்..

அமெரிக்காவில் திருமணத்துக்கு பின் செட்டில் ஆன நதியாவுக்கு சனம், சனா என 2 மகள்கள் உள்ளனர். நதியாவின் வாரிசுகள் நதியாவை போல அழகில் அசத்துகின்றனர்.

அவர்களது புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியானது.

அம்மாவின் மிஞ்சும் அழகில் நதியாவின் மகள்கள் இருப்பதால் லைக்குகள் குவிகின்றன. ஹார்ட்டின்கள் பறக்கின்றன.

விரைவில் அவர்களையும் தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கலாமா என, ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version