“முஸ்லீம் பொண்ணா இருந்துகிட்டு..” மோசமான கேள்விக்கு நஸ்ரியா கொடுத்த நச் பதில்..!

ஜாதியம் என்பது மனிதர்களுக்குள் மண்டி இருக்கும் ஒரு நோய் என்று கூறலாம். இந்த மதம் சார்ந்த விஷயங்கள் எல்லாத் துறையிலும் உள்ளது. குறிப்பாக திரை துறையில் நடிக்கும் முஸ்லிம் நடிகையான நஸ்ரியா இது குறித்து சில விளக்கங்களை தந்திருக்கிறார். அந்த விளக்கத்தினைப் பற்றி விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நஸ்ரியா நசீம்..

நஸ்ரியா நசீம் ஆரம்ப காலங்களில் மலையாள திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். மலையாள திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த பின் தான் திரையுலகில் களம் இறங்கினார்.

குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் ஹீரோயினியாக மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக 2006 ஆம் ஆண்டு ஒரு நாள் ஒரு கனவு என்ற தமிழ் திரைப்படத்தில் இவர் மிகச்சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இதனை அடுத்து பல தமிழ் பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது எனினும் இவர் அட்லி இயக்கிய ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்கள் விரும்பக்கூடிய நடிகைகளில் ஒருவராக மாறி பிரபலமானார்.

இதனை அடுத்து இவருக்கு நையாண்டி, திருமணம் எனும் நிக்கா ஆகிய படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படங்களிலும் இவர் சிறப்பான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் இவருக்கு தமிழிலும் அதிக அளவு ரசிகர்கள் உருவானார்கள்.

19 வயதையே கடந்திருந்த நஸ்ரியா 2014 ஆம் ஆண்டு மலையாள திரைப்பட நடிகரான பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி என செட்டில் ஆகிவிட்டார்.

திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் தலை காட்டாமல் இருந்து வந்த நஸ்ரியா ஆறு ஆண்டு இடைவெளிகளுக்கு பிறகு ட்ரான்ஸ் என்கிற மலையாள படம் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இவர் தற்போது ஒரு படத்திற்கு மூன்று முதல் நான்கு கோடிகள் வரை சம்பளம் பெற்று வருவதாக செய்திகள் கசிந்து உள்ளது.

அடடே சுந்தரா..

மேலும் நடிகை நஸ்ரியா நடிகர் நானியுடன் இணைந்து நடித்த அடடே சுந்தரா என்ற திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவரது நடிப்பு இந்த படத்தில் பாராட்டும் படி உள்ளதாக திரை வட்டாரங்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டிருந்த போது பத்திரிக்கையாளர் ஒருவர் நஸ்ரியாவிடம் கேட்ட கேள்வி ஆனது ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்து கொண்டு இந்த திரைப்படத்தில் எப்படி கிறிஸ்துவ பெண்ணாக நடிக்க சம்மதம் தெரிவித்தீர்கள் என கேட்டார்.

அத்தோடு நிற்காமல் இருந்த வேடத்தை நீங்கள் செய்ததன் மூலம் உங்களுக்கு ஏதாவது சங்கடங்களோ அல்லது கஷ்டங்களோ இருந்ததா என்று மதம் சார்ந்த கேள்வியை எழுப்பி விட்டார்.

இந்தக் கேள்விகளை பொறுமையாக கேட்டு வந்த நஸ்ரியா அவர் கேட்ட கேள்விக்கு மிகவும் பொறுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் பதில் அளித்திருக்கிறார். அந்த பதிலை நடிகை நஸ்ரியா நான் முஸ்லிம், கிறிஸ்தவர் இதையெல்லாம் தாண்டி இந்த கதாபாத்திரத்தை மிகவும் விரும்பினேன்.

அந்த காரணத்தால் தான் இந்த கதாபாத்திரத்தை நான் ஏற்று நடித்தேன். இதனால் எனக்கு எந்த விதமான அசௌரியங்களும் ஏற்படவில்லை என கூறியிருக்கிறார்.

மேலும் முகம் சுளிக்க வைக்க கூடிய வகையில் கேட்ட எந்த கேள்விக்கு மனிதத்தோடு எம்மதமும் தனக்கு சம்மதம் என்ற ரீதியில் பதில் அளித்து இருப்பது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும் தனக்கு பிடித்த கேரக்டர் ரோல் என்பதை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு இந்த கேரக்டரை அவர் செய்திருக்கிறார் என்பது அவர் சினிமாவில் மேல் வைத்திருக்கும் பற்றினை வெளிப்படுத்துகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version