இமான் Ex.மனைவி ரீல் அந்து போச்சு..! SK, இமான் பிரச்சனையில் புதிய திருப்பம்..!

சில மாதங்களுக்கு முன், சிவகார்த்திகேயன், இமான் விவகாரம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அனல் கக்கியது. அட நம்ம சிவகார்த்திகேயனா இப்படி என சினிமா ரசிகர்கள் பலரும் அதிர்ந்து போயினர்.

ஒரு நேர்காணலில் பேசிய பிரபல இசையமைப்பாளர் இமான், சிவகார்த்திகேயன் வெளியே சொல்ல முடியாத துரோகத்தை எனக்கு செய்துவிட்டார் என்று கூறியது வைரலானது.

என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி, அதை வெளியே சொல்ல முடியாது. இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து இனி படம் பண்ண மாட்டேன் என்றும் இமான் அதில் கூறியிருந்தார்.

ஆனால் இந்த விவகாரத்தில், இன்று வரை எந்தவித கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார் சிவகார்த்திகேயன். அயலான் பட பிரமோவுக்கான நேர்காணலில் கூட, இதுபற்றி பேச தடை விதித்தே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் குறித்து இமான் கூறிய இந்த குற்றச்சாட்டு, என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல, இமானின் முதல் மனைவி தானாக முன்வந்து, சிவகார்த்திகேயனுக்கு வக்காலத்து வாங்கியதுதான் இதில் ஹைலைட்டாக மாறி விட்டது.

சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை குறித்து சிவகார்த்திகேயன் பதில் கொடுக்கும் முன்பே, இசையமைப்பாளர் இமானின் மனைவி முந்திக்கொண்டு சிவகார்த்திகேயனுக்கு சர்டிபிகேட் கொடுத்த போது இவர்களுடைய ரீல் அந்து போச்சு.

இதுதான் இந்த பிரச்சனையில் மிகப் பெரிய திருப்பமாக அமைந்துவிட்டது என்று பிரபல சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version