இந்த காரணத்தினால் பல பட வாய்ப்புகளை Reject பண்ணேன்..! ரகசியம் உடைத்த நிவேதா பெத்துராஜ்..!

தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ் 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார்.

தமிழகத்தைச் சேர்ந்த நடிகையான இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் பிறந்தவர். ஒரு நாள் கூத்து திரைப்படத்தை அடுத்து இவருக்கு பல தமிழ் மற்றும் தெலுங்கு பட வாய்ப்புகள் வந்தது.

நிவேதா பெத்துராஜ்..

அந்த வகையில் இவர் பொதுவாக என் மனசு தங்கம் என்று திரைப்படத்தில் 2017 ஆம் ஆண்டு லீலாவதி என்ற கதாபாத்திரத்தை அற்புதமாக செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து 2018 டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்த பிறகு திமிரு புடுச்சவன் படத்திலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

இவர் நடிப்பில் வெளி வந்த சங்கத்தமிழன் படத்தில் தேன்மொழி கதாபாத்திரத்தை அற்புதமாக செய்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய இவர் 2020 ஆம் ஆண்டு பொன் மாணிக்கவேல் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழும் நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விஷயம் பரபரப்பாகிவிட்டது.

பட வாய்ப்பு ரிஜெக்ட் பண்ண காரணம்..

இந்த பேட்டியில் தொகுப்பாளர் இவரிடம் கிளாமர் காட்சிகளில் நடிப்பதை குறித்து கேள்விகளை அதிகளவு கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த அவர் நான் ஹோம்லி கதாபாத்திரத்தை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறேன் எனக் கூறியிருக்கிறார்.

தெலுங்கு படத்தில் நடிக்கும் போது சற்று கிளாமராக நடித்தேன். ஆனால் அதைப் பார்த்துவிட்டு வீட்டில் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் புரிந்து கொண்டார்கள் எனவே ஏதும் என்னிடம் சொல்லவில்லை என்று கூலாக கூறினார்.

அது மட்டுமல்லாமல் திரைப்படங்களில் ஓவர் கிளாமராக நடிக்கும் போது வீட்டில் இருப்பவர்கள் முகம் சுளிக்க கூடிய வகையில் இருக்கக் கூடாது என்பதில் தான் கவனத்தை செலுத்துவதாகவும் இந்த காரணத்தாலேயே பல பட வாய்ப்புகளை நிராகரித்து இருக்கிறேன் என்ற உண்மையை உளறிக் கொட்டினார்.

அது மட்டுமல்லாமல் அது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன். அப்படி பல காட்சிகளில் நடிக்கக்கூடிய படம் எனக்கு வந்த போது அதை ரிஜெக்ட் செய்து விட்டதாக நிவேதா பெத்தராஜ் வெளிப்படையாக கூறி இருப்பது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இவர் திரைப்படங்களை எந்த அளவுக்கு தேர்வு செய்து நடிக்கிறார் என்பதை இந்த பேட்டியின் மூலம் மிகச் சிறப்பாக விளங்கி விட்டதாக அவர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

நல்ல படங்களும் அதற்குரிய கதை அம்சமும் தற்போது குறைந்து வரக்கூடிய காலகட்டத்தில் கவர்ச்சி கட்டாயமாக இருந்தால் தான் இந்த துறையில் நிலைத்து நிற்க முடியும் என்று கருதும் நடிகைகளின் மத்தியில் திரையில் தன்னை பார்க்கும் போது யாரும் முகம் சுளிக்கக்கூடாது என்பதற்காக பட வாய்ப்புகளை இழந்தது பற்றி நிவேதா கூறி இருப்பது சற்று சங்கடத்தை தந்துள்ளது.

எனினும் வருங்காலங்களில் நல்ல திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அமையும் என்று பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version