“ஆண்களின் ஜட்டி வெளியே தெரியும் போது…” – பனிமலர் பன்னீர்செல்வம் எழுப்பிய நச் கேள்வி..!

பிரபல செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர்செல்வம் தற்போது அழகு கலை நிபுணராக பணியாற்றி வருகிறார். தன்னை ஒரு திராவிட சித்தாந்தவாதியாகவும் பெரியாரியவாதியாகவும் அடையாளப்படுத்திக் கொண்டவர் பனிமலர் பன்னீர்செல்வம்.

சமீப காலமாக கோவிலுக்கு செல்வது, பூஜை தட்டுடன் போஸ் கொடுப்பது என சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை உண்டாக்கியது.

தொடர்ந்து பல்வேறு இணைய ஊடகங்களில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் பனிமலர் பன்னீர்செல்வம் சமீபத்தில் பொது இடங்களில் பெண்களுக்கு நடக்கக்கூடிய அஸௌகரிங்கள் குறித்து பேசி இருந்தார்.

இதற்காக நடிகை சாய் பல்லவியின் பேச்சை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு கூறியிருந்தார் பனிமலர் பன்னீர்செல்வம். ஒரு படத்தின் வெளியீட்டு விழாவிற்கு அவர் வந்த பொழுது புடவை அணிந்து கொண்டு வந்திருந்தார்.

அப்போது அவரிடம் ஒரு நடிகையாக இருக்கிறீர்கள் புடவை அணிந்து வருகிறீர்கள் என்று கேட்டதற்கு புடவை தான் எனக்கு சௌகரியமாக இருக்கிறது. பாதுகாப்பான உணர்வை கொடுக்கிறது என கூறி இருந்தார் சாய் பல்லவி.

அப்படி என்றால் மாடர்ன் ஆன உடைகளை அணியும் பொழுது பாதுகாப்பு இல்லை என்பதை அவர் அறிந்திருக்கிறார். மோசமான விஷயங்களை செய்து ஒரு பாதுகாப்பற்ற ஒரு சூழலை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் அதனால் தான் அவர் புடவையை பாதுகாப்பான உடை என்று கூறியிருக்கிறார் சாய் பல்லவி என நொந்து கொண்டார் பனிமலர் பன்னீர்செல்வம்.

தொடர்ந்து பேசிய அவர், என்னை பற்றி மோசமான கமெண்டுகள் வரும் போது எனக்கு கோபம் வரும் ஆனால், அதனால் நான் மட்டும் தான் பாதிக்கப்படுகிறேன். கமெண்ட் செய்தவர்கள் அவர்களுடைய வேலையை கவனிக்க சென்று விடுகிறார்கள். எனவே, ஒரு கட்டத்தில் இவற்றை இக்னோர் செய்ய துவங்கினேன்.

தெரியாத தனமாக தங்களுடைய ப்ரா வெளியே தெரியும் படி ஏதாவது ஒரு பெண் வந்து விட்டால் உடனே ப்ரா வெளிய தெரியுது என்று கூறுகிறார்கள். அதே, ஆண்கள் ஜட்டி வெளியே தெரியும் போது பெண்கள் யாரவது உன்னோட ஜட்டி வெளியே தெரியது-ன்னு சொல்லி இருக்கோமா..? என்று கேள்வி எழுப்புகிறார் பனிமலர்.

ஒரு முறை வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறேன். அப்போது டிவிட்டரில் தொடர்ச்சியாக நோட்டிபிகேஷன் வந்து கொண்டே இருந்தது. என்ன விஷயம் இத்தனை நோட்டிபிகேஷன் வருதுன்னு காரை ஓரமாக நிறுத்தி விட்டு பார்த்தால் என்னுடைய இந்த வீடியோ ஒன்று வைரலாகி கொண்டிருகின்றது.

மேலும், ஒரு முறை புடவை விளம்பர வீடியோவில் நான் அப்படி இப்படி திரும்பும் போது என்னுடைய வயிறு மற்றும் மார்பு பகுதிகளை Zoom செய்து மோசமாக எடிட் செய்து டிவிட்டரில் பதிவேற்றி விட்டார்கள்.

உடனே என்னுடைய நண்பருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழுதேன். என்ன தான் நான் தைரியமான பெண்ணாக இருந்தாலும் இது போன்ற நிகழ்வுகளில் நிலைகுலைந்து தான் போகிறேன். தற்போது இது போன்ற விஷயங்களில் இருந்து எப்படி வெளியே வர வேண்டும். எப்படி ரெஸ்பான்ஸ் பண்ண வேண்டும் என தெரிந்து கொண்டேன் என கூறியுள்ளார் பனிமலர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version