குத்தாட்டம் தானே கேட்டீங்க.. முரட்டு குத்து குத்திய பாப்ரி கோஷ்..! – தீயாய் பரவும் வீடியோ..!

பெங்காலி படமான கால்பேலா என்ற படத்தை கவுதம் கோஸின் இயக்கினார். இந்த படத்தில் பாப்ரி கோஷ் நடிகையான அறிமுகமானார்.

தமிழில் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் டூரிங் டாக்கீஸ் என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படம் 2015ம் ஆண்டில் வெளிவந்தது.

தொடர்ந்து பைரவா, சர்கார், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் பாப்ரி கோஷ் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை பாப்ரி கோஷ்..

சினிமாவை காட்டிலும், சீரியல்களில் நடிகை பாப்ரி கோஷ் முன்னணி நடிகையாக வெற்றி பெற்று இருக்கிறார். பாண்டவர் இல்லம் சீரியலில் அவர்தான் நாயகியாக நடித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி பூவே உனக்காக, சித்தி 2, மகராசி, வானத்தை போல, அருவி, சுந்தரி என பல சீரியல்களில் பயங்கர பிஸியாக நடித்து வருகிறார் நடிகை பாப்ரி கோஷ்.

இந்த குத்து எப்படி இருக்கு..

சமீபத்தில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் செம டிரண்டிங் ஆகி வருகிறது.

அந்த குத்துப்பாட்டு, நடுக்காட்டில் பின்னால் புயல்வெளி தெரிய அந்த பாட்டுக்கு நிஜமாக குத்து ஆட்டம் போட்டிருக்கிறார் பாப்ரி கோஷ்.

அதாவது இரண்டு ஆண்களுக்கு நடுவில் நின்றுக்கொண்டு காவாலியா பாடலை பாடியபடி, அருகில் இருவரை எட்டி உதைத்தும், முகத்தில் பலமுறை குத்தியும் அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார்.

அதைத்தான் குத்து பிளஸ் ஆட்டம் குத்தாட்டம் என்று ரசிகர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

குத்தாட்டம் தானே கேட்டீங்க, முரட்டு குத்தாக அருகில் இருந்த இருவரை முரட்டுத்தனமாக அடித்து குத்தி, தள்ளி விட்ட அந்த பாடல் காட்சி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் பாப்ரி கோஷ்.

அந்த வீடியோ இப்போது செம வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version