ஆண்கள் இதற்கு அழைக்கும் போது எச்சரிக்கையா இருக்கணும்..! பூனம் பாஜ்வா பேச்சு..! விளாசும் ரசிகர்கள்..!

நடிகை பூனம் பாஜ்வா தமிழ் திரையுலகில் சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இளைஞர்களின் நெஞ்சத்தை அள்ளி சென்றவர். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக பரத் நடித்திருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இதனை அடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்த இவருக்கு கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை போன்ற படங்கள் இவர் பெயர் சொல்லும் படி இருந்தது. இதனை அடுத்து தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாள, கன்னட படங்களிலும் நடித்து தனது ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்தி கொண்டார்.

மேலும் 2016 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளி வந்த அரண்மனை 2 படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்.பூனம் இடையில் சற்று குண்டானார், அதன் பிறகு உடல் எடையை பக்காவாக குறைத்து விட்டார்.

வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு ரசிகர்களின் இதயத்தை திருடி விடுவார், 2022-க்கு பிறகு இவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

இதனை அடுத்து தற்போது பெண்களுக்கு அட்வைஸ் செய்யக்கூடிய வகையில் இவர் பேசியிருக்கும் பேச்சைக் கேட்டு ரசிகர்கள் பலரும் இவரை விளாசி தள்ளி விட்டார்கள்.

இதற்குக் காரணம் ஆண்கள் காபி குடிக்க அழைக்கும் போது எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இதில் 1008 விஷயங்கள் உள்ளே இருப்பதாக அந்த விஷயங்கள் பெரும்பாலான வெள்ளந்திப் பெண்களுக்குத் தெரியாது என்பதை பதிவு செய்திருக்கிறார்.

எனவே எந்த ஒரு ஆணும் காபி குடிக்க அழைத்தால் உடனே செல்லக்கூடாது. அப்படி அழைத்தால் அதில் பல்வேறு விதமான எண்ணங்கள் புதைந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதோடு எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து ஒரு காபி குடிக்க அழைத்ததில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? என்று பலரும் புருவங்களை உயர்த்தி அவரது பேச்சினை ரசித்து கேட்டதோடு சில ரசிகர்கள் இப்படியெல்லாம் பேசுவது முறையா? என்று வரிந்து கட்டி சண்டைக்கும் சென்றிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version