16 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர் இவர் தான்,

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, இப்போது 90 நாட்களை கடந்திருக்கிறது. இன்னும் 2 வாரங்களில் இந்த நிகழ்ச்சி நிறைவடைய உள்ளது. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே பிரச்னைகளும், சண்டை சச்சரவுகளும் மிக அதிகமாக நடந்து வருகிறது.

வழக்கமாக பிக்பாஸ் போட்டியாளர்களுக்குள்தான் பிரச்னைகள் ஏற்படும். அவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்து கொள்வர். அவர்களது செயல்பாடுகள் பார்வையாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தும். ஆனால் இந்த சீசனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனும் பயங்கர சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் என்பதுதான் விசித்திரமான சம்பவமாக இருந்தது.

முக்கிய போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த பிரதீப் ஆண்டனியை ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றிய சம்பவத்தில், கமலை பலரும் கடுமையாக விமர்சித்தனர். அடுத்த 8வது சீசனை நடிகர் சரத்குமார் நடத்த இருப்பதாகவும், இந்த 7வது சீசனோடு கமல் பிக்பாஸை விட்டு விலகிவிடுவார் என்றும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

இப்போது நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டி டாஸ்க் வந்தது. அதாவது, பிக்பாஸ் வீட்டுக்குள் வைக்கப்படும் பணப்பெட்டியில் தொகைகள் அதிகரிக்கப்படும். விருப்பமான போட்டியாளர்கள் அந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிடலாம் என்பதுதான் டாஸ்க்

கடந்தமுறை நடந்த 6வது சீசனில் அமுதவாணன் 12 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் வெளியேறினார். இந்தமுறை பணப்பெட்டியுடன் வெளியேறுபவர் யார் என்று ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சக போட்டியாளர் மாயாவின் மிக நெருங்கிய தோழி, பூர்ணிமா 16 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் வெளியேறி இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

பூர்ணிமா பணப்பெட்டியுடன் வெளியேறியதாக கூறப்படும் நிலையில், அவர் செவப்பி என்ற ஓடிடி க்காக தயாரிக்கப்படும் புதிய படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. அந்த செவப்பி படத்தின் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன், அன்னபூரணி படத்திலும் சிறு ரோல் ஒன்றில் பூர்ணிமா நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version