எனக்கும் நடிகர் பிரபுவுக்கும் இப்படித்தான் பழக்கம்..! – வெளிப்படையாகவே கூறிய குஷ்பூ..!

தமிழ் திரையுலகில் நடிகர் திலகம் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்ட நடிகர் சிவாஜியின் மகன் இளைய திலகம் பிரபு தமிழ் மக்களின் இல்லத்தில் ஒருவராக திகழ்ந்தவர்.
இவர் தன் தந்தையைப் போல நடிப்பில் களை கட்டியவர். பல படங்களில் வெற்றியை பதித்த பிரபுவோடு பல முன்னணி நடிகைகள் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

அந்த வரிசையில் நடிகை குஷ்பு உடன் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் மெகா ஹிட் படமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் இவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள் தீயாய் பரவியது.

பிரபுவுடன் பழக்கம்..

இந்நிலையில் குஷ்பூ பிரபுவுடன் தனக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பதை விரிவாகவும், விளக்கமாகவும் கூறிய விதத்தை பார்த்து அனைவரும் ஷாக் ஆகிவிட்டார்கள்.

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கும் நடிகை குஷ்பு 1980-களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். இவர் கிட்டத்தட்ட 20 வருடங்கள் மேலாக சினிமா துறையில் முக்கிய நடிகையாக விளங்குகிறார்.

திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தற்போது அரசியலிலும் ஈடுபட்டு வரும் நடிகை குஷ்பு தனக்கு பிரபுவோடு எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பதை பற்றி கூறும் போது அன்றைய காலகட்டத்தில் எல்லா ஷூட்டிங்கும் சென்னையில் மட்டும் தான் அதிகளவில் நடக்கும் என்பதை தெளிவாக கூறியிருக்கிறார்.

இதில் குறிப்பாக ஏவிஎம், வாகினி மற்றும் பிரசாத் ஸ்டுடியோக்களில் அதிக அளவு ஷூட்டிங் மாறி, மாறி நடக்கும். அந்த சமயத்தில் நான் ஷூட்டிங்க்கு செல்லும் போது அதுவும் கன்னட படத்திற்கான ஷூட்டிங்குக்கு செல்லும் போது நாயர் ரோட்டில் தேவர் பிலிம் ஆபீஸ் இருந்தது.

அந்த சமயத்தில் நடிகர் பிரபு ரோட்டினை கடக்க முற்பட்டு இருந்தார். அவருக்கு என்னை பற்றி அவ்வளவாக தெரியாது. எனினும் எனக்கு அவரது அப்பா சிவாஜியை மிக நன்றாக தெரியும். நடிப்பில் அவர் ஒரு என்சைக்ளோபீடியா எனக் கூறலாம். அந்த சமயத்தில் தான் பிரபுவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

ஜோடி தேடுனாங்க..

என்னை அறிமுகம் செய்து வைத்த வேளலயில் தான் பிரபு நடிக்கக்கூடிய தர்மத்தின் தலைவன் படத்திற்கு பிரபுவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க ஜோடியை தேடுனாங்க.

இதனை அடுத்து ஸ்டூடியோவுக்குள் சென்ற பிரபு சார் இப்போது தான் ஒரு பெண்ணை பார்த்தேன். அவளும் ஷூட்டிங்குக்காக ஏவிஎம் செல்கிறாள். பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறாள்.

இந்த படத்தின் கேரக்டருக்கு நன்கு பொருந்துவாள் என கூற இதை அடுத்து தர்மத்தின் தலைவன் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று குஷ்பு கூறினார்.

இப்படித்தான் நடிகர் பிரபுவோடு நடிக்கக்கூடிய பயணத்தை ஆரம்ப நாட்களில் நான் பெற்றேன். அன்றும் சரி, இன்றும் சரி நான் வாய்ப்புக்காக எந்த ஒரு ப்ரொடியூசரையும் அந்த ப்ரொடியூசரின் ஆஃபீசையோ அணுகியதே கிடையாது.

சினிமாவில் என்னுடைய அறிமுகம் நுழைவு மிக நேர்த்தியான முறையில் கஷ்டம் இல்லாமல் அமைந்தது. எனினும் அதற்குப் பின்பு சினிமாவில் என்னை நிலை நிறுத்த நான் பட்ட கஷ்டங்கள் பற்றி பகிர வார்த்தைகள் இல்லை.

மேலும் பிரபுவோடு இணைந்து நடித்த நாட்களை மறக்க முடியாது. சின்னத்தம்பி திரைப்படம் எனக்கு திரை உலக வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படமாக இருந்தது. மேலும் ஒரு திருப்புமுனையை அமைத்துக் கொடுத்தது எனக் கூறியிருக்கிறார்.

இதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இப்படித்தான் பிரபுவுக்கும் உங்களுக்கும் பழக்கம் ஏற்பட்டதா? என்று பங்கமாக கலாய்த்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version