காதலால் தடம் மாறிய பிரபு..! பிரபல நடிகையால் பிரிந்த சிவாஜி குடும்பம்..! நடிகர் பிரபுவின் மறுபக்கம்..!

நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்பு குறித்து பிரபல நடிகை கூறியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. நடிகை குஷ்புவும் பிரபுவும் காதலித்தார்கள் என்றும் இருவரும் காதலால் நடிகர் சிவாஜி குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு ஆகியவை குறித்தும் பேசி இருக்கிறார் பிரபல நடிகை காக்கிநாடா சியாமளா.

90களில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் பாலிவுட் படங்களில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த இவர் ஒரு ஹிந்தி நடிகை என்றாலும் தென்னிந்திய சினிமாவில் நல்லா வரவேற்பு பெற்றார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு நடிகர் பிரபுவுடன் சின்னத்தம்பி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இயக்குனர் பி வாசு இயக்குனர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த படத்திற்கு பிறகு குஷ்பூவுக்கும் பிரபுவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. சில வருடங்கள் காதல் உறவிலிருந்து அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் வசித்து வந்தார் நடிகர் பிரபு என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகையான காக்கிநாடா சியாமளா நடிகை குஷ்பூ பிரபு இடையேயான உறவு குறித்து பேசி இருக்கக்கூடிய விஷயம் இணையபக்கங்களில் வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது, குஷ்பூ மிகவும் நல்ல பெண். அவரும் பிரபுவும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். இருவரும் திருமணமும் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர். ஆனால் இவர்களுடைய இந்த திருமணத்திற்கு நடிகர் பிரபுவின் மனைவி சம்மதிக்கவே இல்லை.

இதனால் சிவாஜி குடும்பத்தின் பெயர் திரைத்துறையிலும் பொது வெளியிலும் மோசமான பார்வையை பெற்றது. குஷ்பூ வேறு மதத்தை பின்தொடர்புவர் என்பதால் நடிகர் சிவாஜி குஷ்பூவை தன்னுடைய மருமகளாக ஏற்றுக் கொள்ள கடுமையாக எதிர்த்தார் பிரபுவுடன் கடுமையாக சண்டை போட்டார் என்று கூறினார்கள். ஆனால் அது உண்மையா என தெரியவில்லை.

இதனால் பிரபுவின் குடும்பத்தில் பல பிரிவுகள் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் பொருத்து பொருத்து பார்த்த நடிகர் பிரபு இனிமேல் இந்த உறவு வேண்டாம் என நடிகை குஷ்பூவை பிரிந்து விட்டார். தன்னுடைய வீட்டில் மீண்டும் சேர்ந்து கொண்டார்.

பிரபுவை பிரிந்து பிறகு நடிகை குஷ்பூ கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். அந்த பிரச்சனையிலிருந்து படிப்படியாக விடுபட்டு சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டார்.

இரண்டு மகள்களும் இருக்கிறார்கள் என கூறியிருக்கிறார். மேலும் நடிகர் பிரபுவுடன் உறவு குறித்து நடிகை குஷ்பூ பல்வேறு இடங்களில் வெளிப்படையாக பேசியிருக்கிறார் என்பதும் நான்கு வருடங்கள் பிரபுவுடன் உறவில் இருந்ததாகவும் கூறியிருக்கிறார் குஷ்பூ என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version