மீண்டும் இணையத்தில் வெளியான ஆபாச புகைப்படங்கள்.. சீரியல் நடிகை பிரவீனா செய்த சம்பவம்..!

என்னை ஏண்டா இம்புட்டு அழகா படைச்சே ஆண்டவா என, ஒரு படத்தில் நடிகர் வடிவேலு பஞ்ச் டயலாக் போல பேசுவார். அதுபோல்தான் நடிகை பிரவீனா நிலைமையும் இருக்கிறது.

அம்சமான, அழகான ஆண்ட்டியான இவரை, ஒரு வாலிபர் அடிக்கடி மார்பிங் மூலம் மாற்றி, ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு வருகிறார்.

தீரன் அதிகாரம் 1, டெடி, சாமி 2, வெற்றிவேல், கோமாளி உள்ளிட்ட சில படங்களில் அம்மா, அத்தை கேரக்டர்களில் நடித்தவர் பிரவீனா.

உஸ்தாத் ஓட்டல், இங்கிலீஸ் மீடியம், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா, அக்னி சாட்சி, கௌரி உள்ளிட்ட சில மலையாள படங்களிலும் பிரவீனா நடித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி தமிழில் பிரபல சீரியல் நடிகையாகவும் இவர் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறார். குறிப்பாக ராஜா ராணி, மகராசி, பிரியமானவள், இனியா போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

பிரவீனா…

கேரளாவை பூர்வீகமாக கொண்ட பிரவீனா, பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார். கடந்த 2021ம் ஆண்டில் இவரது ஆபாச புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிரவீனா, திருவனந்தபுரம் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பிரவீனாவை ஆபாசமாக சித்திரித்து மார்பிங் மூலம் அவரது ஆபாச படங்களை வெளியிட்ட நெல்லையை சேர்ந்த பாக்யராஜ் என்ற 24 வயது வாலிபரை கைது செய்தனர்

இந்த வழக்கில் ஒரு மாதம் சிறைதண்டனை அனுபவித்த பாக்யராஜ், விடுதலையாகி டெல்லிக்குச் சென்றுள்ளார்.

மீண்டும் கைது..

இந்நிலையில் கடந்தாண்டு நடிகை பிரவீனா, அவரது மகளின் புகைப்படங்கள் அதே போல மார்பிங் முறையில் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு, மீண்டும் இணையத்தில் வைரலானது.

இதை பார்த்து அதிர்ந்து போன பிரவீனா, மீண்டும் திருவனந்தபுரம் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார்.

ஏற்கனவே பிரவீனாவின் ஆபாச படங்களை வைரலாக்கிய அதே நெல்லை வாலிபர்தான், மீண்டும் பிரவீனாவை பழிவாங்கும் நோக்கத்தில் அவரது புகைப்படங்கள், அவரது மகளின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் பரவவிட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

கேரளா போலீசார் இதற்கென நான்கு பேர் கொண்ட தனிப்படை அமைத்து, ரகசிய விசாரணைகள் செய்து, டெல்லியில் பதுங்கியிருந்த வாலிபர் பாக்யராஜை மீண்டும் கைது செய்துள்ளனர்.

அந்த வாலிபரை கேரளா அழைத்து வந்து, போலீசார் கஸ்டடியில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீண்டும் இணையத்தில் வெளியான தனது ஆபாச புகைப்படங்களை பார்த்து நொந்துபோன நடிகை பிரவீனா, மீண்டும் போலீசில் புகார் அளித்து அந்த வாலிபரை 2வது முறையாக கைது செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version