“என்ன இருந்தாலும் அந்த ரகசியத்தை சொல்லக்கூடாது..” நடிகை பிரவீனா ஓப்பன் டாக்..!

பார்த்தவுடன் மனதுக்கு பிடித்துவிடும் ஒரு அழகான நாகரிக பெண்மணியாக வடிவான தோற்றத்தில் பிரவீனா காணப்படுகிறார்.

அதனால் சினிமாவிலும், சீரியல்களிலும் அவருக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்புகள் தேடித் தேடி வருகின்றன.

சினிமா, டிவி சீரியலில் நடிப்பது மட்டுமின்றி இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் இருக்கிறார். பலருக்கும் பின்னணி குரலாக திரைக்கு பின்னால் இருந்து பேசியிருக்கிறார்.

தமிழில் மட்டுமின்றி மலையாள படங்களில் நடித்த பல மாநில விருதுகளை பெற்றவர் பிரவீனா என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறந்த பின்னணி குரல் கலைஞராகவும் இவருக்கு விருதுகளை வழங்கி கேரள மாநில அரசு பிரவீனாவை கவுரவப்படுத்தி இருக்கிறது.

டெடி, கோமாளி, சாமி 2, தீரன் அதிகாரம் 1, வெற்றிவேல் உள்ளிட்ட படங்களில் அதில் ஹீரோக்களுக்கு அம்மா கேரக்டரில் பிரவீனா நடித்திருக்கிறார்.

பிரவீனா..

பிரவீனா சினிமாவில் அம்மாவாக நடிப்பது மட்டுமின்றி பல சீரியல்களில் அம்மா கேரக்டர்களில் நடித்து அசத்தி வருகிறார்.

ராஜா ராணி 2, மகராசி, பிரியமானவளே, நம்ம குடும்பம், ஆதி பராசக்தி, மகாராணி போன்ற பல சீரியல்களில் பிரவீனா நடித்திருக்கிறார். இதுதவிர மலையாளத்திலும் ஏகப்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.

யாராக இருந்தாலும் நோ..

சினிமா, சீரியலில் பிரபல நடிகையாக உள்ள பிரவீனா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியதாவது,

ஒருவர் உங்களுக்கு எந்த அளவுக்கு நண்பராக இருந்தாலும் உங்கள் உறவினராக இருந்தாலும் கூட ரகசியத்தை ரகசியமாக வைத்திருக்காத ஒருவரிடம் உங்களுடைய ரகசியத்தை கூறக்கூடாது.

அதிலும் குறிப்பாக உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகள் சார்ந்த ரகசியங்களை என்ன காரணம் கொண்டும் உங்களைத் தாண்டி வெளியே சொல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, பேசி இருக்கிறார் நடிகை பிரவீனா.

என்னவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் தனிப்பட்ட ரகசியங்களை சொல்லக் கூடாது என்று கூறியிருக்கிற பிரவீனாவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version