“தன்னுடைய ஆபாச புகைப்படத்தை தனக்கே அனுப்பிய நபர்..” – நடிகை பிரவீனா கொடுத்த பதிலை பாருங்க..!

சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரவீனா. சமீப காலமாக திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

குறிப்பாக கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடித்துக்கொண்டிருக்கிறார். நடிகை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்த சீரியல் என்றால் அது பிரியமானவள் சீரியல் என்று கூறலாம்.

தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை பிரவீனா சமீபத்தில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் மற்றும் அது குறித்து அவர் எடுத்த நடவடிக்கை ஆகியவற்றை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

நடிகை பிரவீனாவுக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதே சமயம் இவருடைய முகத்தை மட்டும் வைத்து மோசமான புகைப்படங்களை எடிட் செய்து இணையத்தில் பதிவேற்றும் ஆசாமிகளும் இருக்கவே செய்கிறார்கள்.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய பிரவீனா அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். சமீபத்தில் தன்னுடைய மகளுடைய சினிமா பிரவேசத்தை உறுதிப்படுத்தும் விதமாக தன்னுடைய மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருந்தார்.

மாடர்ன் உடையில் தன்னுடைய மகளுடன் எடுத்துக் கொண்ட பிரவீனாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இது ஒரு பக்கம் இருக்க ஆசாமி ஒருவர் நடிகை பிரவீனாவின் புகைப்படத்தை ஆபாசமாக எடிட் செய்து அதனை அவருக்கே அனுப்பி இருக்கிறார்.

இது குறித்து அந்த நபருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார் பிரவீனா. ஆனால், மீண்டும் மீண்டும் மோசமான புகைப்படங்களை அனுப்பி கொண்டு வந்திருக்கிறார். அந்த ஆசாமி ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நடிகை பிரவீனா அருகில் இருந்த காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்திருக்கிறார்.

இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் உடனடியாக அந்த ஆசாமி எங்கே இருக்கிறார்.. போன்ற விவரங்களை சைபர் கிரைம் போலீசார் மூலம் கண்டறிந்து அதிரடியாக கைது செய்திருக்கின்றனர்.

இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளம்பி இருக்கிறது. பொதுவாக நடிகைகள் இப்படியான விஷயங்களை சாமானியமாக கடந்து விடுவார்கள். ஆனால், நடிகை பிரவீனா துணிச்சலாக அந்த ஆசாமியை கைது செய்யும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளார்.

இவருடைய தைரியத்திற்கு பாராட்டுக்கள் என பிரவீனாவுக்கு பாராட்டுகளை பதிவு செய்தனர் ரசிகர்கள். இது ஒரு பக்கம் இருக்க தற்பொழுது A.I தொழில்நுட்பம் இன்னும் பூதாகரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

இலவசமாகவே கிடைக்கக்கூடிய இந்த A.I தொழில்நுட்பத்தை கொண்டு முகம் தெரியாத ஆசாமிகள் பல பிரபல நடிகைகள் மற்றும் நடிகைகள் மற்றும் பிரபலங்களின் முகத்தை மட்டும் எடுத்து மோசமான வீடியோக்களை எடிட் செய்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இது நாளொரு மேனியும் பொழுது வண்ணமாக நீடித்து வருகிறது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version