இணையத்தில் வெளியான ஆபாச புகைப்படங்கள்..! நடந்தது என்ன..? பிரவீனா பகீர் புகார்.! கட்டம் கட்டி தூக்கிய அதிகாரிகள்..!

இணையதளங்களில் பிரபலமான அழகான நடிகைகள், சீரியல் நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி மார்பிங் முறையில் ஆபாச புகைப்படங்களை பதிவேற்றம் செய்தவர்களை கைது செய்கின்றனர்.

அதனால்தான் பெரும்பாலும் இளம்பெண்கள், கல்லூரி, பள்ளி மாணவியர், இல்லத்தரசிகள் தங்களது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

பிரவீனா..

விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் மாமியார் கேரக்டரில் நடித்து வருபவர் பிரவீனா. இவர் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

வெற்றி, டெடி, தீரன் அதிகாரம் ஒன்று, சாமி 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஹஸ்பென்ட்ஸ் ஈஸ் கோவா, உஸ்தாஜ் ஹோட்டல், ஹனி பீ மெமரிஸ் போன்ற மலையாள படங்களில் பிரவீனா நடித்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிரவீனாவின் ஆபாச புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரவினா, திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

மார்ஃபிங் புகைப்படங்கள்

பிரவினா கொடுத்த புகாரை வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி, திருநெல்வெலியை சேர்ந்த பாக்யராஜ் (26) என்ற வாலிபரை மும்பையில் கைது செய்தனர். மார்பிங் புகைப்படங்களாக அவர், பிரவினாவை ஆபாசமாக இணையத்தில் சித்தரித்தது தெரிய வந்தது.

சிறையில் இருந்து வெளிவந்த பாக்யராஜ், மீண்டும் இதே போல் மார்பிங் முறையில் நடிகை பிரவினா மற்றும் அவரது மகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, இணையத்தில் பரவ விட்டார். மீண்டும் இதுகுறித்து பிரவினா திருவனந்தபுரம் போலீசில் புகார் அளிக்க, பாக்யராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.

இணையத்தில் வெளியான ஆபாச புகைப்படங்கள் காரணம் என யார், பிரவினா கொடுத்த புகாரை அடுத்து, பாக்யராஜை மீண்டும் கட்டம் கட்டி போலீசார் தூக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version