எனக்கு சிலை வச்சா நான் இதைத்தான் பண்ணுவேன்.. வெக்கமின்றி கூறிய பிரியா பவானி ஷங்கர்..!

டிவி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக தன் வாழ்க்கையை துவக்கியவர் பிரியா பவானி ஷங்கர்.

பல சினிமா நிகழ்ச்சிகளில், பங்கேற்க வரும் திரை நட்சத்திரங்களை நேர்காணல் செய்வதும் அவரது அப்போதைய பணியாக இருந்திருக்கிறது.

பிறகு தமிழ் சினிமாவில் மேயாத மான் படம் மூலம் அறிமுகமானார். இயக்குநர் ரத்தனக்குமார் இயக்கிய இந்த படத்தில் வைபவ் ஜோடியாக நடித்தார்.

கடைக்குட்டி சிங்கம், மாஸ்டர், கசடற தபற, களத்தில் சந்திப்போம், அகிலன், மான்ஸ்டர், ருத்ரன், பத்துதல, பொம்மை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

அடுத்து டிமாண்டி காலனி 2, இந்தியன் 2, வான் உள்ளிட்ட படங்களில் இப்போது நடித்து வருகிறார்.

திரைத்துறையில் கலை சேவை செய்ய நான் வரவில்லை. நிறைய படங்களில் நடித்து நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில்தான், சினிமாவில் நடிக்க வந்திருக்கிறேன் என உண்மையை சொன்னவர் பிரியா பவானி ஷங்கர்.

பிரியா பவானி ஷங்கர்..

இன்றைய இளம் நடிகைகளில் முக்கிய இடத்தில் இருக்கும் பிரியா பவானி ஷங்கர் அடிக்கடி தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்து, ரசிகர்களை உசுப்பேற்றி விடுகிறார்.

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சென்னையில் மிகப்பெரிய ஓட்டல் ஒன்றையும் பிரியா பவானி ஷங்கர் கடந்த ஆண்டில் துவங்கினார்.

சூரிய வம்சம் சரத்குமார்..

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற பிரியா பவானி ஷங்கரிடம், குஷ்புவுக்கு கோவில் கட்டிய மாதிரி உங்களுக்கு மவுண்ட் ரோட்டுல ஒரு கோவில், சிலை வைச்சு, இல்லேன்னா பெரிய கட் அவுட், பாலாபிஷேகம் எல்லாம் ரசிகர்கள் செய்தால் என்ன செய்வீர்கள் என, கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், சூரியவம்சம் படத்தில் சரத்குமார் இப்படி பேப்பரை முகத்துக்கு முன்னாடி வெச்சு மறைச்சுட்டு பார்ப்பாரே, அந்த மாதிரி கூட்டத்துல ரகசியமா பார்த்துட்டு வந்துடுவேன்.

அப்புறமா டிவிட்டர்ல ஏம்பா இப்படி எல்லாம் பண்றீங்க அப்படீன்னு தன்னடக்கத்தோட ஒரு டுவீட்டை போட்டுடுவேன் என்று, விளையாட்டாக பதில் சொல்லி சிரித்திருக்கிறார்.

எனக்கு சிலை வெச்சா, மனசுக்குள்ள சந்தோஷப்பட்டுட்டு ரகசியமாக பார்த்துட்டு வந்துடுவேன் என்று வெளிப்படையாக, வெட்கப்படாமல் கூறியிருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version