“நான் அப்படிப்பட்ட பெண் கிடையாது..” – குண்டை தூக்கி போட்ட பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவரிடம் உங்களைப் பற்றி நீங்களே மூன்று வார்த்தையில் விவரித்து சொல்லுங்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதாவது பிரியா பவானி சங்கர் அவரைப்பற்றி அவரே என்ன நினைக்கிறார் என்பதை மூன்று வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்பதுதான் கேள்வி.

இதற்கு பதில் அளித்த பிரியா பவானி சங்கர்.. ஒன்று, நான் ஸ்மார்ட்டான பெண். இரண்டு, நான் ரொம்ப சென்சிட்டிவ்வான பெண்.. மூன்று, மிகவும் அறிவான பெண் என கூறினார்.

அடுத்த நொடியே, இல்லை இல்லை.. அறிவான பெண் என்று என்னை கூறுவது சரியாக இருக்காது.

எப்போதுமே நான் எனக்கு சரி என்று படக்கூடிய.. என்னுடைய மனதிற்கும் என்னுடைய மூளைக்கும் இது சரியாக இருக்கும் என்று முடிவு செய்து தான் அனைத்து விஷயங்களையும் செய்கிறேன்.

அப்படித்தான் என்னுடைய எல்லா முடிவுகளுமே இருக்கின்றது. ஆனால், ஒரு முடிவை எடுத்து அதனை செய்த பிறகு சில நேரங்களில் இதை ஏன் செய்தோம் எவ்வளவு பெரிய முட்டாளான முடிவு எடுத்திருக்கிறோமே.. என்றெல்லாம் நான் வருத்தப்பட்டது உண்டு.

எனவே நான் அறிவார்ந்த பெண் என்று சொல்வதை நானே ஒப்புக்கொள்ள மாட்டேன். அதற்கு பதிலாக வரும் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யும் ஒரு பெண் என்று எடுத்துக் கொள்ளலாம். என பதிவு செய்திருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version