Priya Bhavani Shankar : படத்தின் கதை பிடிக்கலனா இதை தான் பண்ணுவேன்..! பிரியா பாவனி ஷங்கர் ஓப்பன் டாக்..!

Priya Bhavani Shankar : தமிழ் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் வரிசையில் இருப்பவர் தான் பிரியா பவானி சங்கர். இவர் ஆரம்ப நாட்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கிறார்.

இதனை அடுத்து கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி தொடரின் நடித்ததின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதை அடுத்து சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று வெற்றி நடை போட்டு வரும் நடிகைகளில் பிரியா பவானி சங்கரும் ஒருவர்.

வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டதால் அடுத்தடுத்து படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், சாப்டர் 1, கசடதபற, பொம்மை, இந்தியன் 2, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி தனது நீண்ட நாள் காதலரோடு எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு இளசுகளின் மனதில் சங்கடங்களை ஏற்படுத்தி விடுவார்.

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்று பிரியா பவானி சங்கர் ஓபன் ஆக சில விஷயங்களை பேசி இருக்கிறார். அதாவது இவர் நடிக்கக்கூடிய படத்தின் கதை பிடிக்கலேனா இப்படித்தான் பண்ணுவேன் என்பதை தெளிவாக கூறிவிட்டார்.

அவர் அப்படி என்ன செய்வார் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? அதற்கான விடை இது தான். பிரியா பவானி சங்கரிடம் ஒரு இயக்குனர் படத்தின் கதையை சொல்லும் போது அந்த கதை அவருக்கு பிடிக்கவில்லை என்றால் முகத்தில் அடித்தது போல் இது பிடிக்கவில்லை, நான் நடிக்க மாட்டேன் என்று எப்போதும் கூற மாட்டார்.

அதற்கு பதிலாக வேறு கதை ஏதாவது இருந்தால் சொல்லுங்க, கண்டிப்பாக மற்றொரு படத்தில் நாம் சேர்ந்து பணியாற்றலாம் என மழுப்பலான பதிலைத் தான் கூறுவாராம்.

இப்படி இவர் கூற என்ன காரணம் என்றால் ஒவ்வொரு கதைக்கும் பின்னாலும் ஒரு வலி, வேதனை, கட்டாயம் இருக்கும். கதை எழுதுவது என்பது அவ்வளவு சுலபமான எளிமையான விஷயம் கிடையாது.

அது போலத் தான் ஒரு கதையை நாம் தேர்வு செய்வதும் மிகவும் சவாலான வேலையாக இருக்கும். அப்படி தேர்வு செய்யக்கூடிய கதை ரசிகர்களுக்கு பிடித்திருக்க வேண்டும். அப்படி பிடித்தால் தான் நாம் திரை துறையில் வெற்றி இலக்கை எட்டி பிடிக்க முடியும்.

எனவே கதை ஒத்து வராத நேரத்தில் கதை பிடிக்க வில்லை என முகத்தில் அடித்தது போல் கூறும் பழக்கம் எனக்கு கிடையாது எனக் கூறியிருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version