கல்யாணதுக்கு முன்னாடியேவா.. பிரியா பவானி ஷங்கரை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

கல்யாணம் தான் கட்டிக்கொண்டு ஓடி போலாமா.. இல்ல ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா.. என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அந்த வரிகளுக்கு ஏற்ற படி தற்போது பிரியா பவானி ஷங்கர் நடந்து கொண்டிருக்கிறாரா? என்று கேட்கக் கூடிய வகையில் சில விஷயங்கள் வெளி வந்துள்ளது.

பிரியா பவானி ஷங்கரை பொருத்த வரை சினிமா சாயலே இல்லாத குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்து தன் திறமையால் முன்னேறி இன்று திரைப்படங்களில் தனக்கு என்று ஓர் தனி இடத்தைப் பிடித்துக் கொண்ட ஸ்மார்ட் நடிகை.

தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையாக மாறி இருக்கும் இவர், ஆரம்ப காலத்தில் ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குச் சென்ற இவர் “மேயாத மான்” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அங்கீகரிக்கப்பட்டார். முதல் படத்தில் இவரது நடிப்பு அங்கீகாரம் தரக்கூடிய வகையில் இருந்தது.

மேலும் இவர் பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளி வந்த “கடைக்குட்டி சிங்கம்” படத்தில் நடித்து எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனதோடு ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார்.

இதனை அடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் “மாஃபியா” படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகச் சரியாக ஓடவில்லை. இதனை அடுத்து “களத்துல சந்திப்போம்” என்ற படம் ஓரளவு ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் ரிலீஸ் ஆன “ஓ மணப்பெண்ணே” தொடரானது ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

“பிளட் மணி” என்கிற படம் ஓரளவு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளானது. இதனை அடுத்து ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து “ருத்ரன்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவை ரீதியான விமர்சனத்தை இவருக்கு பெற்று தந்தது.

பிரியா பவானி ஷங்கர் தனது நீண்ட நாள் காதலரான ராஜவேல் என்பவர் உடன் ஈசிஆர் – ல் இருக்கும் பங்களா வீட்டில் லிவ்விங் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்து வருகிறார். விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் இருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் ரொமான்டிக்காக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது திருமணம் செய்து கொள்ளாமலேயே காதலன் ராஜ்வேல் மடியில் படுத்தபடி குழந்தை ஒன்றை கையில் வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளி வந்து பலரையும் கவர்ந்துள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் திருமணத்திற்கு முன்பே குழந்தைகள் பெற்று விட்டாரா? என்ற கேள்வியை முன் வைத்து இருப்பதோடு இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். இதனால் இந்த போட்டோ இணையத்தில் வைரலாக பரவி விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version