பிரியங்கா மோகனின் 20 நிமிட காட்சிகள்..! உச்ச கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகில் டாக்டர் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக மாறியவர் பிரியங்கா அருள் மோகன். இவர் 2019 ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோசி இயக்கத்தில் வெளி வந்த “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தில் நடித்ததின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து தெலுங்கு படத்தில் வெளி வந்த “கேங் லீடர்” படத்தில் நாணிக்கு ஜோடியாக நடிக்க இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து தமிழில் “டாக்டர்” படம் மூலம் மிகப்பெரிய ரசிகர்களின் ஆதரவை பெற்றுவிட்டார்.

இதனை அடுத்து இவர் டான், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிப்பதோடு நின்று விடாமல் கவர்ச்சியையும் அதிகளவு காட்டி நடிப்புக்கு கூடுதல் மெருகேற்றுவார்.

இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் “டிக் டாக்” என்ற திரைப்படத்தில் மிகவும் கவர்ச்சிகரமாக நடித்ததற்காக தற்போது வருத்தப்பட்டு இருக்கிறார். இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்று “டிக் டாக்” படத்தில் அத்துமீறிய காட்சிகளில் நடித்ததை பற்றி பேசியிருக்கும் பிரியங்கா மோகன், சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடல் தொழில் செய்து வந்த நேரத்தில் தான் இந்த படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்ததாக கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் டிக் டாக் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளி வந்த நிலையில் பிரியங்கா மோகன் ரசிகர்களை உறைய வைக்கக்கூடிய அளவு படுக்கையறை காட்சிகளில் படு நெருக்கத்தை காட்டி இருக்கிறார்.

இதைப் பார்த்த பல ரசிகர்கள் அட இது நம் பிரியங்கா மோகனா? என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு மட்டுமல்லாமல் எப்படி இது போன்ற படத்தில் அவர் நடித்தார் என்ற கேள்வியையும் விடுத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த பட குழு சமீபத்தில் பிரஸ் மீட் வைத்து ஒரு புகாரை தெரிவித்திருக்கிறது. இந்த படத்தின் இயக்குனரும், ஹீரோவும் படத்தை தியேட்டரில் பார்த்த போது 20 நிமிடப் பகுதியை காணவில்லை என்று கூறியிருக்கிறார்கள் குறிப்பாக அந்த 20 நிமிட காட்சிகள் பிரியங்கா மோகனின் காட்சிகள் தான் மிஸ்ஸிங் ஆகிவிட்டது என்று கூறி இருக்கிறார்கள்.

அத்தோடு ஒரே நாளில் அந்த காட்சிகளை எடுத்து மீண்டும் படத்தில் இணைத்து ரிலீஸ் செய்து இருப்பதாகவும், ஒரு வேளை பிரியங்கா மோகன் மறைமுகமாக அந்த வேலையை செய்திருக்கலாம் என்று சிலர் கூறி வருகிறார்கள்.

இதற்கு காரணம் இந்த படம் வெளிவந்தால் தனது பெயர் கெட்டுவிடும் என்ற எண்ணத்தில் பிரியங்கா மோகன் இது போல செய்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் கிளம்பி உள்ளது.

இது எந்த அளவுக்கு உண்மை என்பது பிரியங்காவிற்கு மட்டுமே தெரியும். எனவே இது நிமித்தமாக அவர் இதற்கு பதில் தருவாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version