என் சினிமா வாழ்க்கையை நாசம் பண்ண பாக்குறீங்களா..? – கதறும் பிரியங்கா மோகன்..!

சில நடிகைகள் திரையில் பார்த்தவுடனே பிடித்துப் போய் விடுகிறது. மீனா, மாதுரி தீக்‌ஷித், அனுஷ்கா, நயன்தாரா, நதியா போன்ற சிலருக்கு தான் அந்த வசீகர முகம் இருக்கிறது.

அந்த வரிசையில் ஒருவராக பிரியங்கா மோகன் இருக்கிறார். அழகும், இளமையும் நிறைந்த நடிகையாக பார்த்தவுடன் ரசிகர்களுக்கு பிடித்துவிடும் வடிவில் இருக்கிறார். மாடலிங் துறையில் இருந்தவர்.

முதன்முறையாக ஒந்த் கத்தே ஹெல்லா என்ற கன்னட படத்தில் அறிமுகமான பிரியங்கா மோகன், அடுத்து தமிழில் 2021ம் ஆண்டில் டாக்டர் படத்தில் அறிமுகமானார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து டான் என்ற படத்திலும், அவருக்கு ஜோடியாக நடித்தார்.

டாக்டர் படம் பெரிய வெற்றியை பெற்றது. பிரியங்கா மோகன் பெரிதாக கவனிக்கப்பட்டார். ஆனால் டான் படம் சரியாக போகவில்லை.

அதன்பிறகு சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

கோவை மாவட்டம். பொள்ளாச்சியில் நடந்த இளம்பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்களை மையப்படுத்தி இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார்.

ஆனால் படம் போதிய வரவேற்பை பெறாமல் தோல்வியடைந்தது. அதனால் அந்த படத்தில் நடித்த பிரியங்கா மோகனும் கவனிக்கப்படவில்லை. ஆனால் கேப்டன் மில்லர் படத்தில், அவரது நடிப்பு கவனிக்கப்பட்டது.

பொங்கல் ரிலீஸாக வெளியான கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருக்கிறார். துப்பாக்கி பிடித்து ஆக்‌ஷன் நடிப்பில் அசத்தி இருக்கிறார்.

பிரியங்கா மோகன்..

மிக விரைவில் தெலுங்கு மொழியில் பிரியங்கா மோகன் நடித்த ஓஜி, சரிபோதா ஆகிய இரண்டு படங்கள் வெளிவர இருக்கின்றன. தமிழில் பிரதர் என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார். இந்த படமும் ரிலீஸ் ஆகிறது.

இந்த படங்களை தொடர்ந்து இன்னும் சில தமிழ் படங்களில் பிரியங்கா மோகன் நடிக்க கமிட் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த ஆண்டில் அவரது படங்கள் அதிகமாக ரிலீஸ் ஆகும் எனக் கூறப்படுகிறது.

இதுதவிர டிக்டாக் என்ற படத்தில், படுக்கையறை காட்சிகளில் பிரியங்கா மோகன் நடித்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சினிமா வாழ்க்கை..

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பிரியங்கா மோகன் பங்கேற்றார். அதில் கேள்வி கேட்ட தொகுப்பாளினி, நீங்கள் சினிமா வாழ்க்கையில் சந்தித்த மோசமான அனுபவம் எது, என்று கேள்வி எழுப்பினார்.

சினிமாவில் இப்போதுதான் அறிமுகமாகி சில படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அதற்குள் சினிமாவில் மோசமான அனுபவம் என்று கேள்வி கேட்டால், நான் என்ன பதிலை சொல்ல முடியும்?

என் கேரியரை முடிக்கப் பார்க்கறீங்களா என்று எதிர்கேள்வி கேட்டு எரிச்சலை வெளிப்படுத்தினார். இது தற்போது வைரலாகி வருகிறது.

என் சினிமா வாழ்க்கையை நாசம் பண்ண பார்க்கிறார்களே, என்று மனதுக்குள் கதறிய நிலையில்தான், இப்படி ஒரு பதிலடி தந்திருக்கிறார் பிரியங்கா மோகன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version