தனிப்பட்ட முறையிலும்.. நடிகையாகவும்.. என்னோட பதில் இது தான்..! – ரசிகர்களை குழப்பிய பிரியங்கா மோகன்..!

தமிழ் சினிமாவில் பிரியங்கா மோகன் முதன்முதலாக அறிமுகமானது டாக்டர் படம்தான். நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார்.

இதில் பெண் குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையில், கடத்தப்பட்ட தங்களது குழந்தையை, குடும்பமாக சென்று மீட்பதுதான் கதை.

இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் தொடர்ந்து பிரியங்கா மோகனுக்கு தமிழில் வாய்ப்புகள் வரவில்லை.

பிரியங்கா மோகன்..

டாக்டர் படத்தை தொடர்ந்து, பிரியங்கா மோகன் நடித்த படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த இந்த படம் பெரிய அளவில் தோல்வி அடைந்தது.

அதனால் இந்த படத்திலும், பிரியங்கா மோகனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

சமீபத்தில் பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியங்கா மோகன். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூல் குவித்திருக்கிறது.

இதற்கிடையே நேர்காணல் ஒன்றில், பிரியங்கா மோகன் லிப்-லாக் குறித்து சொன்ன கருத்து, வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலான ஒரு காமெடி காட்சியை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

ஒருவர் இந்த ஆட்டுக்கு சாப்பிடுவதற்கு என்ன கொடுப்பீர்கள் என்று ஆடு மேய்ப்பரிடம் கேட்பார் அதற்காக கருப்பு ஆட்டை கேட்கிறீர்களா அல்லது வெள்ளை ஆட்டை கேட்கிறீர்களா என்று மறு கேள்வி கேட்பார்.

கருப்பு ஆட்டுக்கு என்ன கொடுப்பீர்கள் என்று முதலில் சொல்லுங்கள் என்று கேள்வி கேட்பார் நெறியாளர்.

கருப்பு ஆட்டுக்கு சாப்பிடுவதற்கு புல் கொடுப்போம் என்பார் ஆடு வளர்ப்பவர். அப்படி என்றால் வெள்ளை ஆட்டுக்கு என்ன கொடுப்பீர்கள் என கேட்கும் போது, வெள்ளை ஆட்டுக்கும் புல் தான் கொடுப்பேன் என்று அவர் பதில் கூறுவார்.

இதைப்போலவே நடிகை பிரியங்கா மோகன் சமீபத்தில் அடடே என்று மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு ஒரு பதிலை நேர்காணல் ஒன்றில் கொடுத்திருக்கிறார்.

லிப்-லாக் பற்றி..

திரைப்படங்களில் லிப் லாக் காட்சிகளில் நடிப்பது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த பிரியங்கா மோகன், தனிப்பட்ட முறையில் கேட்டால் அதற்கு எனக்கு மனசு ஒப்பாது என கூறியிருந்தார்.

சரி நடிகையாக கதைக்குத் தேவை என்றால், நீங்கள் அப்படி கொடுப்பீர்களா என்று கேட்டதற்கு, இல்லை அப்போதும் எனக்கு மனது ஒப்பாது என கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

https://twitter.com/GetsCinema/status/1752275336971026717

தனிப்பட்ட முறையிலும், நடிகையாகவும் என்னோட பதில் என ஒரேவிதமான கேள்விக்கு இரண்டுமுறை விளக்கமளித்து ரசிகர்களை தலைசுற்றும் அளவுக்கு குழப்பி விட்டார் நடிகை பிரியங்கா மோகன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version