இப்போவே இப்படியா.. Thug Life பதில் கொடுத்த பிரியங்கா மோகன்..!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் பிரியங்கா மோகன். ஒன்த் கதெ ஹெல்லா என்ற கன்னட படத்தில் தான் பிரியங்கா மோகன் அறிமுகமானார்.

கடந்த 2019ம் ஆண்டில், கேங் லீடர் என்ற படம் தெலுங்கு மொழியில் அறிமுகமானது.

பிரியங்கா மோகன்..

தமிழில், டைரக்டர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அடுத்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை.

சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தில், தனுஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பிரியங்கா மோகனிடம் நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதில் உங்களுக்கு என்ன உணவு பிடிக்கும் என கேள்வி கேட்கப்பட்டது அதற்கு எல்லா அசைவ உணவுகளும் எனக்கு பிடிக்கும் எனக் கூறினார்.

அதனை தொடர்ந்து உங்களுடைய சினிமா வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த மோசமான அனுபவம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

Thug Life..

இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத பிரியங்கா மோகன், நான் இப்போதுதான் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறேன்.

அதற்குள் என்னுடைய சினிமா வாழ்க்கையில் மோசமான அனுபவம் என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?

இப்போதே இப்படியா கேள்வி எழுப்புவது என தொகுப்பாளினுக்கு Thug Life பதில் கொடுத்து இருக்கிறார்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version