ஆத்தி.. சினிமாவிற்கு முன் அந்த தொழிலை செய்தவரா? – பிரியங்கா மோகன் பற்றி பலரும் அறியாத தகவல்..!

தமிழ் திரைப்படத்தில் டாக்டர் திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்த பிரியங்கா அருள் மோகன் பற்றி உங்களுக்கு அதிக அளவு கூற வேண்டிய அவசியம் இல்லை. இவர் 2019 ஆம் ஆண்டு க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனை அடுத்து தெலுங்கில் வெளி வந்த “கேங் லீடர்” என்ற திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதை இடம் பிடித்தார். அது மட்டுமல்லாமல் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.

தமிழ் திரை உலகில் டாக்டர் திரைப்படத்திற்கு பிறகு தான் எதற்கும் துணிந்தவன் போன்ற படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார். டிக் டாக் என்ற திரைப்படத்தில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை திணற வைத்தார்.

தற்போது இவர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படமானது ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுக்கப்படக்கூடிய பிரமாண்டமான திரைப்படமாக இருக்கும் என அனைவரும் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் இவர் திரைப்பட நடிகையாக மாறுவதற்கு முன்பு என்ன தொழில் செய்தார் தெரியுமா? பிரியங்கா மோகன் பார்ப்பதற்கு அழகான பவ்யமான தோற்றம் கொண்டிருந்த இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங் தொழிலை தான் செய்திருக்கிறார். அந்த சமயத்தில் வெகு சிலர் இவர் அழகை பார்த்து கன்னடப் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பை தந்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இவர் நடிப்பு கலையில் பயிற்சி எடுத்துக் கொண்டு சிறப்பாக நடிக்க கற்றுக் கொண்டிருக்கிறார். இந்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version