அக்கா தங்கச்சியோட பிறந்திருந்தா அருமை தெரியும்..! பிரியங்கா மோகன் விளாசல்..! என்ன காரணம்..?

பார்க்கும் போதே மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றக்கூடிய அளவிற்கு சாமுத்திரிகா லட்சணத்தோடு இருக்கும் நடிகை பிரியங்கா மோகன். இவர் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த சில நாட்களிலேயே பிரபல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தவர்.

பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளி வந்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலத்திற்கு அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே முன்னணி நாயகனோடு இணைந்து நடித்த இவரது நடிப்பு அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றது.

மேலும் ஆரம்ப நாட்களில் கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் 2019 ஆம் ஆண்டு வெளி வந்த ஒந்து கதை ஹெல என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டார். எனினும் இவர் எதிர்பார்த்த அளவு இந்த படம் ஓடவில்லை.

எனவே அக்கட தேசம் சென்று அங்கும் கேங் லீடர் என்ற படத்தில் முன்னணி நடிகர் நானிக்கு ஜோடியாக நடிக்க, இந்த படம் இவருக்கு மாபெரும் வெற்றியைத் தந்து அடுத்தடுத்து பட வாய்ப்புக்களை பெற்று தந்தது.

அந்த வகையில் தான் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டார். டாக்டர் படத்தை அடுத்து டான், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் இவர் நடிப்பு சொல்லிக் கொள்ளும் படி இருந்ததாக ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

தற்போது தமிழில் தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு விருந்தாக வர இருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் பிரியங்கா மோகன் பெண்கள் பாதுகாப்பு குறித்து உணர்ச்சி வசப்பட்டு பேசி இருக்கிறார்.

இந்தப் பேச்சில் இவருக்குள் இவ்வளவு ஆதங்கம் இருக்கிறதா? என்று கேட்கக் கூடிய வகையில் இவரது பேச்சு இருந்தது என கூறலாம். இதற்கு காரணம் சினிமா துறையில் மட்டுமல்லாமல் பெண்கள் செல்லும் எல்லா துறைகளிலுமே அட்ஜஸ்ட்மென்ட் கொடுமை உள்ளதாக கூறியவர், பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்று அடித்து கூறிவிட்டார்.

நாடு சுதந்திரம் பெற்று எவ்வளவு ஆண்டுகள் ஆன பிறகும், பெண்களுக்கு உரிய உரிமைகள் கொடுக்கப்பட்ட பிறகும் இந்த நிலை நீடிப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் உங்கள் வீட்டில் உங்கள் அம்மா, அக்கா, தங்கைகளை நீங்கள் அப்படி நடத்துவீர்களா? என்ற கேள்வியை வைத்திருப்பதோடு மற்ற பெண்கள் என்றால் இளக்காரமாக உள்ளதா? என்றும் கேட்டு இருக்கிறார்.

எனவே பெண்களுக்கு உரிய முக்கியத்துவத்தை சிலர் மறுப்பதினால் தான் இந்த சிக்கல் என்னும் தொடர்கதையாக உள்ளது. இது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உகந்ததல்ல. நான் என் மனதில் பட்டதை தான் கூறுகிறேன் என்று கூறியிருக்கும் பேச்சானது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version