பண்ணுனா தனுஷ் கூட பண்ணனும் பிரியங்கா மோகன் பேச்சை கேட்டு தூக்கி வாரிப்போட்ட ரசிகர்கள்..!

டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். இன்றைய இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த அழகான இளம் நடிகைகளில் இவரும் மிக முக்கியமானவர். டாக்டர் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக உள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக, பிரியங்கா மோகனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி தரப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சி, நேற்று சென்னையில் உள்ள நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் பங்கேற்றார். படக்குழுவினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

விழாவில் பேசிய நடிகை பிரியங்கா மோகன், என் மனதுக்கு மிக நெருக்கமான படமாக கேப்டன் மில்லர் படத்தை தான் சொல்வேன். துப்பாக்கியை பிடிக்கவே தெரியாத எனக்கு, அதற்காக பயிற்சி எல்லாம் கொடுத்தனர். கில்லர் கில்லர் கேப்டன் மில்லர் தனுஷ் உங்களோட பெரிய ரசிகை நான்.

கேப்டன் மில்லர் என்ற ஆக்சன் படத்தில் தனுஷ் உடன் நடித்துவிட்டேன். அடுத்து காதல் கொண்டேன் போன்ற காதல் படத்தை தனுஷ் உடன் பண்ண ஆசைப்படுகிறேன். கேப்டன் மில்லர் படம், எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. தனுஷ் பாடினால் இளையராஜா பாடுவது போலவே இருக்கும். தனுஷ் தாடி லுக் எனக்கு பிடிச்சிருக்கு என்று பேசினார் பிரியங்கா மோகன். விழாவில் ஏராளமாக ரசிகர்களும் கலந்துக்கொண்டனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version