ஆறே மாசத்தில் கணவரை பிரிந்த ரோஜா பிரியங்கா நல்காரி.. காரணம் கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்..!

தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் நடிகை தான் பிரியங்கா நல்காரி. ஒரு காலத்தில் சின்னத்திரை தொகுப்பாளினியாக திகழ்ந்தவர்.

பொதுவாகவே இன்று சீரியல்களைப் பார்க்கக் கூடிய ரசிகர்கள் அதிகரித்து இருக்கக்கூடிய வேளையில் பல விதமான தனியார் தொலைக்காட்சிகளில் அதிக அளவு சீரியல்கள் ஒளிபரப்பாகி இல்லத்தரசிகள் அனைவரையுமே கட்டிப்போட்டுள்ளது.

ரோஜா பிரியங்கா நல்காரி…

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலின் நாயகியாக பிரியங்கா நல்காரி நடித்திருந்தார். இவரது பெயரைச் சொல்லி அழைப்பதை விட ரோஜா என்று சொல்லி அழைக்கக்கூடிய ரசிகர்களை அதிகளவு இருக்கிறார்கள். அந்த அளவு இந்த தொடரில் மிகச் சிறப்பான முறையில் நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.

இதனை அடுத்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீதா ராமன் தொடரில் தனது சீறிய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தாய்மார்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் பிரியங்காவின் நடிப்பு இருக்கும்.

சீரியல் நடிகையான பிரியங்கா நல்காரி இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே பிஸியாக இருப்பவர். கடந்த ஆண்டு தான் இவர் தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த தனது காதலனை இரு வீட்டார் சம்மதம் கிடைக்காத நிலையில் இருவருமே மனம் ஒத்து தங்களது திருமணத்தை கோயில் ஒன்றில் சிம்பிளாக நடத்தி முடித்துக் கொண்டார்கள்.

எனது காதலனாக ராகுல் வர்மாவை திருமணம் செய்து கொண்டதை அடுத்து வெளிநாட்டில் வசித்து வந்த பிரியங்கா சீரியலில் நடிப்பதற்காக அவ்வப்போது வருவதும் போவதுமாய் இருந்தார். மேலும் இவர் கணவர் சீரியலில் நடிக்க வேண்டாம் என்று கூறியதால் அதிகளவு புதிய சீரியல்களில் தலை காட்டாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இணையத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வகையில் திருமணம் ஆகி ஆறே மாதத்தில் கணவரை பிரிந்து ரோஜா பிரியங்கா நல்காரி இருக்கிறார்? என்ற செய்தி வெளி வர ஆரம்பித்துவிட்டது.

இதனை அடுத்து இவர் தன் கணவரை விட்டு பிரிந்து செல்ல காரணம் என்ன என்று ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஆராய்ந்து வரும் வேளையில் கடுமையான அதிர்வலைகளை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி விட்டது என கூறலாம். இதற்கான விடை என்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

முடிவுக்கு வந்த காதல் திருமணம்..

உருகி, உருகி காதலித்து வந்த இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். என்ன ஆனது, இவர்கள் ஏன் இப்படி பிரிந்து இருக்கிறார்கள் என்ற செய்தி பரவலாக பேசப்படுகிறது. இதற்கு காரணம் சமூக வலைதள பக்கங்களில் தனது கணவனோடு நெருக்கமாக இருந்த அனைத்து புகைப்படங்களையும் தற்போது பிரியங்கா நல்காரி நீக்கி இருக்கிறார்.

மேலும் திருமணம் முடிந்து ஒரு வருடம் கூட முடியாத நிலையில் தனது கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவோ அல்லது தன் கணவர் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளாதது தான் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

இவரைப் போலவே இவரது கணவர் ராகுல் அவரது இன்ஸ்டால் பக்கத்தில் இருக்கும் தனது மனைவியின் புகைப்படத்தை முற்றிலும் நீக்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இருவரும் சமூக வலைத்தளங்களில் ஜோடியாக இருக்கக்கூடிய புகைப்படங்களை நீக்கி இருப்பது அவர்கள் பிரிந்து இருப்பதற்கான அடையாளமாக கருதப்படுகிறது.

அத்தோடு இவர்கள் இருவரும் அவர்களது குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்கள். அப்படி எதிர்ப்பை மீறி தன்னுடைய காதலனை கரம் பிடித்த நடிகை பிரியங்கா நல்காரி தற்போது கணவனை விட்டு பிரிந்து இருக்கிறாரா? என்ற விஷயத்தை தெளிவு படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version