Priyanka Nalkari : துளி மேக்கப் இல்லாமல் படுக்கையறையில் பிரியங்கா நல்காரி..!

இன்றைய சூழலில், சினிமா நடிகைகளுக்கு கிடைக்கும் அதே வரவேற்பும், புகழும் சீரியல் நடிகைகளுக்கும் கிடைத்து விடுகிறது என்றால் மிகையல்ல. அதனால்தான், சீரியல் நடிகைகள் சிலர் வெகு எளிதாக சினிமாவுக்குள் வந்துவிடுகின்றனர்.

அதேபோல் சினிமாவில் மார்க்கெட் போனாலும், அவர்களை முதலில் வரவேற்பது டிவி சீரியல்கள்தான். உலக நாயகன் கமல்ஹாசனே, விஜய் டிவியில் பிக்பாஸ் தொகுப்பாளராக மாறிய பிறகு சின்னத்திரை, பெரிய திரை பாகுபாடுகளே இல்லை.

தமிழ் சீரியல் நடிகைகளில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பலரது கவனத்தையும் ஈர்த்தவர் பிரியங்கா நல்காரி. சன்டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

பல குடும்பங்களில் நடக்கும் மாமியார், மருமகள் சண்டைதான், ரோஜா சீரியலின் மையக்கரு. அதில் மருமகளாக அசத்தியிருந்தார் பிரியங்கா நல்காரி.

தொடர்ந்து ஜீ தமிழ் சேனலில் சீதாராமன் தொடரிலும், அடுத்து நளதமயந்தி சீரியலிலும் பிரியங்கா நல்காரி நடித்து வருகிறார்.

ராகுல் என்பவரை திருமணம் செய்த பிறகு, அடிக்கடி தன் கணவருடன் இருக்கும் ஜாலியான புகைப்படங்களை அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் அப்டேட் செய்து, ரசிகர்களை குதூகலப்படுத்தவது பிரியங்கா நல்காரியின் வழக்கம்.

இப்போது துளி கூட மேக்கப் இல்லாமல், படுக்கை அறையில் எடுத்த தனது புகைப்படங்களை அப்டேட் செய்திருக்கிறார் பிரியங்கா நல்காரி. புடவையில், ஆளை அசத்தும் அழகில் இருக்கும் அவரது இயல்பான அழகை பார்த்த ரசிகர்கள், சொக்கிப் போய் விட்டனர்.

மேக்கப் இல்லாமல், இப்படி ஆளை அசத்தும் அழகில் இருக்கிறாரே, என்ற கமெண்டுகளுடன் அவரது அந்த புகைப்படங்கள், இப்போது வைரலாகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version