இந்த படத்துல நடிக்க ஏன் ஒத்துக்கிட்டேன்.. கதறி அழுத சினேகா..! கட்டுப்படுத்திய நடிகர்..!

நடிகை சினேகா தமிழ் சினிமாவில் அழகில், நடிப்பில் கொடி கட்டி பறந்த ஒரு நடிகை.

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிசெய்த சுசி கணேஷ் இயக்கிய முதல் படம் விரும்புகிறேன். இந்த படத்தில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்தார்.

இந்த படத்தில்தான் சினேகா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரது யதார்த்தமான அழகும், இயல்பான நடிப்பும் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

அடுத்தடுத்த படங்களில் நடித்து சினேகா முன்னணி நடிகையாக மாறினார். நல்ல நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்தார்.

ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ், வசீகரா, ஆட்டோகிராப், பிரிவோம் சந்திப்போம், போஸ், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு போன்ற பல படங்களில் நடித்தார்.

புன்னகை அரசி..

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு முன் புன்னகை அரசி என்ற பட்டம் பெற்ற ஒரே நடிகை கேஆர் விஜயா தான். அவருக்கு பிறகு புன்னகை அரசி சினேகா என்ற பட்டம் இவருக்குதான் கிடைத்தது.

ஒரு கட்டத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் உடன் இவர் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் நிச்சயம் திருமணம் செய்துகொள்வார்கள் என்றும் பேசப்பட்டது.

குறிப்பாக பார்த்திபன் கனவு, ஏப்ரல் மாதத்தில், போஸ் படங்களில் நடித்த போது ஸ்ரீகாந்த் – சினேகா இருவரும் தீவிரமாக காதலிப்பதாகவும் தகவல் பரவியது.

ஆனால் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பிரசன்னா, சினேகா நடித்த போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நட்பாகி, ஒரு கட்டத்தில் அது காதலாக மாறியது.

பின்னர் இருவரும் தங்களது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். இப்போது ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

டிவி ஷோக்களில் சினேகா பங்கேற்கிறார். அவ்வப்போது வேலைக்காரன், பட்டாஸ் போன்ற படங்களிலும் நடிக்கிறார்.

இப்போது மீண்டும் விஜயுடன், வசீகரா படத்துக்கு பிறகு கோட் படத்தில் சிநேகா நடித்து வருகிறார்.

புதுப்பேட்டை..

சமீபத்தில் ஒரு நேர்காணலில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறுகையில், செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை என்ற படத்தில், விலைமாது கேரக்டரில் சினேகா நடித்திருப்பார்.

ஒரு கட்டத்தில் இந்த கேரக்டரில் சினேகா நடிப்பது குறித்து, பொதுவெளியில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதனால் இந்த படத்தில் நடிக்க ஏன் ஒத்துக்கிட்டேன் என கதறி அழுதிருக்கிறார் சினேகா.

ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்போது அவருடன் இருந்த நடிகர் தனுஷ், இந்த கேரக்டர் நிச்சயம் நல்ல பெயரை உங்களுக்கு பெற்றுத் தரும் என்று ஆறுதல் கூறியிருக்கிறார்.

அந்த படத்தின் ஹீரோ தனுஷ்தான். அவர் கூறியது போலவே, சினேகா நடிப்பு பேசப்பட்டது என்று கூறியிருக்கிறார் செய்யாறு பாலு.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version