“ஆண்கள் 5 நிமிஷத்துல முடிச்சுடுவாங்க… ஆனால்.. பெண்கள்..” – ஓப்பனாக பேசிய ரச்சிதா மகாலட்சுமி..!

தமிழில் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடன் நடித்த சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

திருமணம் முடித்து சில ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஆனால், யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் தன்னுடைய கணவர் மீது ஆபாச வார்த்தைகளில் பேசுகிறார் கொலை மிரட்டல் விடுக்கிறார் என்பது போன்ற புகார்களை காவல்துறையில் கொடுத்திருந்தார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

அதன்பிறகு இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது. இருவரும் விவாகரத்து பெரும் சூழ்நிலையில் இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி அவ்வப்போது பேட்டியில் கலந்து கொள்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில், பேட்டி ஒன்றில் சமீபத்தில் கலந்து கொண்ட இவர் பெண்கள் ஆடை அணிவது மற்றும் அதில் இருக்கக்கூடிய கடினமான விஷயங்கள் குறித்து தன்னுடைய வேதனையை பகிர்ந்து இருந்தார்.

அவர் கூறியதாவது, நிறைய முறை நான் ஆண்களை பார்த்து ஏங்கி இருக்கிறேன். அவர்கள் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு அல்லது வேலைக்கு தயாராக வேண்டும் என்றால் 5 நிமிடத்தில் தயாராகி முடித்து விடுகிறார்கள்.

ஆனால், பெண்கள் எங்களால் அப்படி தயாராக முடியவில்லை என்று வேதனைப்பட்டு இருக்கிறேன். ஒவ்வொரு புடவை அணியும் பொழுதும் நான் அவ்வளவு சிரமப்பட்டு அணிவேன். ஆனால் அதுதான் என்னுடைய அடையாளமும் கூட.

குறிப்பாக சொல்லப்போனால் சரவணன் மீனாட்சி சீரியலில் நான் அணிந்த புடவை போல வேண்டும் என பல கடைகளில் பெண்கள் கேட்டு வாங்கி பயன்படுத்துகிறார்கள். அதுதான் நான் அந்த அளவுக்கு என்னுடைய ஆடையின் மேல் கவனம் செலுத்துவதற்கான காரணம்.

இருந்தாலும் ஆண்கள் 5 நிமிடத்தில் முடித்து விடக் கூடிய ஒரு வேலையை பெண்கள் 15 நிமிடம் அரை மணி நேரம் என செய்ய வேண்டி இருக்கிறது என வேதனை பகிர்ந்து இருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version