இந்த உடம்பை வச்சிக்கிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? நிருபரின் கேள்விக்கு ரச்சிதா கொடுத்த பதிலை பாருங்க..!

சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டவர். இதனை அடுத்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நபராக மாறிய இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

ரச்சிதா மகாலட்சுமி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்ற ரச்சிதா, இதனை அடுத்து நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து புகழ் அடைந்தார்.

இதனை அடுத்து இவருக்கு கன்னட திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்து சீரியல் இருந்து விலகி திரைப்படங்களில் நடிக்கச் சென்றார். திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடன் மீண்டும் சின்னத்திரைக்கே நடிக்க வந்தார்.

மேலும் இவர் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்ததை அடுத்து ஜீ தமிழ் சீரியலில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக தற்போது நடித்து வருகிறார். உப்புக் கருவாடு உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் இவர் தன் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இதனை தொடர்ந்து இது பற்றி பல்வேறு வகையான சர்ச்சைகள் எழுந்த நிலையில் இவர் கன்னட இயக்குனரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சில நாட்களுக்கு முன் இணையங்களில் இந்த விஷயம் படு வேகமாக பரவியது.

போலீஸ் உடை..

மேலும் இவரது கணவர் தினேஷ் பிக் பாஸ் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் உள்ளே நுழைந்தவர் எப்படியாவது தன் மனைவியின் மனதை மாற்றி சேர்ந்து வாழலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் அவர் நினைப்பு பொய்யாய் போய் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டு இருப்பதாக அவர் வாயாலே தெரிவித்தார்.

மேலும் தற்போது புதிய படம் ஒன்றில் ரச்சிதா கமிட் ஆகி இருக்கிறார். அது நிமித்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. இந்த புகைப்படங்களில் இவர் போலீஸ் உடையில் காட்சி அளித்திருக்கிறார்.

இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் நிருபரின் கேள்விக்கு ரச்சிதா கொடுத்த பதிலைப் பார்த்து அனைவரும் அவரை பாராட்டி இருக்கிறார்கள், பிக் பாஸ் என்பது போட்டியாளர்களுக்கு ஒரு பிளாட்பார்மாக இருக்குமே ஒழிய ஒவ்வொருவரது தனி திறமை தான் அவர்கள் வாழ்க்கையில் அவர்களை முன்னேற வழி செய்கிறது. அதற்கான முயற்சிகளும் அவர்கள் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை ஆணித்தரமாக கூறியிருக்கிறார்.

அத்தோடு அந்த நிருபர் இந்த உடம்பை வைத்துக்கொண்டு போடுற ட்ரெஸ்ஸா இது நீங்கள் பார்ப்பதற்கு மிகவும் பப்பிளியாக இருப்பதால் உங்களுக்கு போலீஸ் கேரக்டர் பொருந்துமா? என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மெய் நிகரே என்ற படத்தில் நடித்து வந்திருக்கும் இவர் தான் அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார். எக்ஸ்ட்ரீம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ரச்சிதா மகாலட்சுமி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இந்த படமானது ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக உருவாக்கி வருகிறது.

எனவே தான் படு அழகாக இருக்கக்கூடிய ரச்சிதா மகாலட்சுமி போலீஸ் அதிகாரி வேடத்திற்கு சரியான பொருத்தமாக இருப்பாரா? என்ற பாணியில் கேள்வி எழுப்பிய நிருபருக்கு தகுந்தபடி பதிலளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இவர் பேசியிருக்கும் பேச்சானது ரசிகர்கள் அனைவராலும் பெரிதளவு கவனத்தை ஈர்த்து உள்ளது. மேலும் இவருக்கு இதனைத் தொடர்ந்தும் பல பட வாய்ப்புகள் வந்து சேர வாய்ப்புகள் உள்ளதாக கூறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version