கண்டதை வைரல் ஆக்குறத விட.. இதை வைரல் ஆக்குங்க.. டைட்டான உடையில் கிக் ஏற்றும் ரச்சிதா மகாலட்சுமி..!

தமிழ் சீரியல்களில் பார்வையாளர்களின் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ரக்சிதா மகாலட்சுமி. இவரது லட்சணமான வடிவழகில், பார்வையாளர்கள் வசீகரிக்கப்படுகின்றனர்.

சரவணன் மீனாட்சி 3, பிரிவோம் சந்திப்போம், இளவரசி, நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ரக்சிதா மகாலட்சுமி,

இதுதவிர சினிமாவிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் உப்புக்கருவாடு, மெய் நிகரே, பயர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தாய்மொழியான கன்னடத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 2022ம் ஆண்டில் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் சீசன் 6ல் ரக்சிதா மகாலட்சுமி பங்கேற்றார். வீட்டுக்குள் பல வாரங்கள் அமைதியாக இருந்து, பல லட்சங்களுடன் எந்தவித விமர்சனங்களுக்கும் சிக்காமல் வெளியேறினார்.

பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த போது, உடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் சில ஆண்டுகளே திருமண வாழ்க்கை நீடித்தது.

இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழும் நிலையில், அவரை விவாகரத்து செய்யும் முடிவில் ரக்சிதா இருக்கிறார்.

சினிமா என்ட்ரி..

இந்நிலையில் மீண்டும் சினிமா என்ட்ரி ஆவது குறித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரக்சிதா அதிரடியான புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

காக்கி நிற பேண்டும், ப்ரவுன் நிற சர்ட்டும் அணிந்தபடி பளபளக்கும் போலீஸ் பெல்ட் இடுப்பில் கம்பீரம் காட்ட துப்பாக்கியை உயர்த்தி பிடித்தபடியும், நீட்டியபடியும் பலவிதமான புகைப்டடங்களை பதிவிட்டுள்ளார்.

போலீஸ் உடையில்..

ரக்சிதா அப்டேட் செய்துள்ள அந்த போலீஸ் உடையில் இருக்கும் புகைப்படங்களை பார்த்தால் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பது தெளிவாகிறது.

அடுத்த தமிழ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஞாயிறு அன்று வெளியாக இருக்கிறது என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

கண்டதை எல்லாம் வைரல் ஆக்குறதை விட இதை வைரல் ஆக்குங்க என ரசிகர்களுக்கு அதில் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

டைட்டான உடையில் கிக் ஏற்றும் விதமாக கிறங்கடிக்கும் ரக்சிதா மகாலட்சுமியின் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version