Rachitha Mahalakshmi : புருஷன் இல்லனா இதை பண்ணிக்கலாம்..! – ரச்சிதா மகாலட்சுமி சொன்னதை பாருங்க..!

டிவி சீரியல் நடிகைகளில் மிக அழகான நடிகைகளில் ஒருவர் ரக்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மிகவும் பிரபலமானவர்.

ரக்சிதா மகாலட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் சீரியல்களில் நடித்திருக்கிறார். இவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் பேசத் தெரியும்.

இவர் தன்னுடன் தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

ஆனால் திருமணமான சில ஆண்டுகளில் இருவரும் பிரிந்துவிட்டனர். மனைவியுடன் சேர தினேஷ் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், ரக்சிதா மறுத்து வருகிறார்.

கடந்த பிக்பாஸ் சீசன் 6ல் ரக்சிதா மகாலட்சுமி பெண் போட்டியாளராகவும், இந்தமுறை பிக்பாஸ் சீசன் 7ல், தினேஷூம் கலந்துக்கொண்டனர். ஆனால் இருவருமே வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் கணவர் இல்லாமல் வாழ்வது குறித்து சில கருத்துகளை ரக்சிதா மகாலட்சுமி கூறியிருக்கிறார். அது தற்போது மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

புருஷன் இல்லை என்றால் எப்போதும் அழுது கொண்டே இருக்க வேண்டும் சோகமாக இருக்க வேண்டும் என்பது பெண்களின் விதியா, அப்படி எல்லாம் எதுவும் கிடையாது.

தங்களுடைய வாழ்க்கையை வாழ்வதற்கு பெண்களுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.

பிடிக்காத ஒரு நபருடன் தொடர்ந்து வாழ்வதுதான் வேதனையானது தவிர அவரை பிரிந்து விட்டு மகிழ்ச்சியாக இருப்பது எந்த குற்றமும் இல்லை..

புருஷன் இல்லை என்றாலும் நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நம்மால் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என போட்டு உடைத்திருக்கிறார் நடிகை ரக்சிதா மகாலட்சுமி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version