இதனால் தான் ஆடையின்றி நடித்தேன்.. ராதிகா ஆப்தே சொன்ன அதிர வைக்கும் காரணம்..!

நடிகை ராதிகா ஆப்தே தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி என பல படங்களில் நடித்தவர். தமிழில் கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குமுதவள்ளி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

மேலும் பிரகாஷ் ராஜ் நடித்த தோனி படத்திலும், கார்த்தி நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான மெரி கிறிஸ்துமஸ் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் பெரிய அளவில் வரவேற்கப்படவில்லை.

ராதிகா ஆப்தே..

ராதிகா ஆப்தே சமீபத்தில் ஒரு விமான நிலையத்தில், விமானம் வர தாமதமானதால் ஒரு அறையில் சக பயணிகளுடன் பல மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டார்.

அப்போது விமான நிலைய ஊழியர்கள் கடுமையாக நடந்துக்கொண்டனர் என்றும் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

ராதிகா ஆப்தே கவர்ச்சி காட்சிகளில் தாராளமாக நடிப்பவர். சில ஆங்கிலப் படங்களில் நிர்வாண காட்சிகளில் கூட தயக்கமோ, கூச்சமோ இல்லாமல் நடித்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

இது பலவிதமான விமர்சனத்தை, சர்ச்சை ஏற்படுத்திய போதும் அதுபற்றி ராதிகா ஆப்தே கண்டுகொள்ளவில்லை.

ஏழ்மையில் யாரும் கண்டுக்கல..

இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய ராதிகா ஆப்தே, எங்கள் குடும்பம் ஒருவேளை சாப்பாட்டுக்காக கஷ்டப்பட்டு இருக்கிறது.

ஒரு மாதம், பல மாதங்கள் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் மோசமான வார்த்தைகளால் வீட்டின் உரிமையாளரிடம் திட்டு வாங்கி இருக்கிறோம்.

அடுப்பு இல்லாத காரணத்தினால் மெழுகுவர்த்தியை வாங்கி வந்து அந்த மெழுகுவர்த்தியின் சூட்டில் சமைத்து சாப்பிட்டு இருக்கிறோம்.

அப்படியான வறுமையான காலகட்டத்தில் எங்களுக்கு உதவ யாரும் வரவில்லை. ஏழ்மையில் யாரும் கண்டுக்கல.

ஆனால், எனக்கு வாழ்க்கை கொடுத்த சினிமாவிற்காக நான் ஆடையின்றி நடிக்கும் போது, என்னை கேள்வி கேட்க பலரும் வரிசையில் வருகிறார்கள்.

இப்படியான நபர்களுக்கு நான் பதில் கொடுக்க விரும்பவில்லை. ஒருவேளை உணவுக்காக கண்ணீர் சிந்திய நாட்களெல்லாம் என் நினைவில் இருக்கின்றது.

அப்போது உதவாத யாருமே என்னை தற்போது கேள்வி கேட்க உரிமை கிடையாது.

சினிமா என்னுடைய வேலை. சினிமா எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறது. சினிமாவுக்கு என்ன தேவையோ அதனை கொடுப்பது என்னுடைய கடமை என, கூறி இருக்கிறார் ராதிகா ஆப்தே.

எனக்கு வாழ்க்கை கொடுத்த சினிமாவுக்கு தேவை என்பதால், ஆடையின்றி நடித்தேன். தொடர்ந்தும் நடிப்பேன் என்று கூறி அதிர வைத்திருக்கிறார் ராதிகா ஆப்தே.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version