தன்னுடைய பிறப்புறுப்பில் ஏற்பட்ட மாற்றம்.. இது தான் காரணம்..! ஓப்பனாக கூறிய சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி..!

பிரபல சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி சமீபத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான பில்டப் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் சினிமா நடிகையாகவும் மாறியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் நடித்துக் கொண்டிருந்த பூவே உனக்காக என்ற சீரியலில் இருந்து திடீரென விலகியதன் காரணம் என்ன…? என்ற கேள்விக்கு அந்த சீரியலில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் முதன்மையாக கூறிய விஷயம் எனக்கு சம்பளமே கொடுக்காமல் தான் நடிக்க வைத்தார்கள். சீரியல் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாக தொடங்கினால் தான் உங்களுக்கு சம்பளம் வழங்க முடியும் என்று கூறினார்கள்.

எப்போதாவது பத்தாயிரம், 20 ஆயிரம் என வற்புறுத்தி கேட்டால் மட்டும் கொடுப்பார்கள். ஆனால் அவுட்டோர் ஷூட்டிங் என்றாலே நடிகைகளுக்கு ஒரு சிக்கலான விஷயம்தான். ஏனென்றால், அங்கே உடை மாற்றுவதற்கோ அல்லது பெண்களுக்கு என தனி கழிப்பறை இருக்காது.

ஒரு முறை உடை மாற்றுவதற்கு அரை கேட்டேன்.. அப்பொழுது ஒரு ரூமை கைகாட்டி அங்கே சென்று உடை மாற்றுங்கள் என்று கூறினார்கள். உள்ளே சென்றால் ஒரு வாலிபர் அரைகுறை ஆடையோடு அமர்ந்திருந்தார்.

என்னை பார்த்ததும் வெளியே சென்று விடுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவர் வெளியே செல்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தார். எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. உடனே நான் வெளியே வந்து படக்குழுவின் மூலம் இது குறித்து கேட்டேன்.

பெரிய பெரிய நடிகைகளே இதெல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள்.. நீ இப்பொழுதுதான் அறிமுகமாக இருக்கிறாய்.. உனக்கு இதுவே போதும்… போய் விரைவாக மாற்றிக் கொண்டு வா. என்று மரியாதை குறைவாக பேசினார்கள்.

அதன் பிறகு கழிவறை, நாங்கள் ஒரு வீட்டில் படப்பிடிப்பிற்காக சென்றிருந்தோம். அங்கே பெண்களுக்கான தனி கழிவறை வசதியை ஏற்படுத்தி கொடுக்கவில்லை. படப்பிடிப்பில் இருந்த அனைவருமே ஒரே கழிவறையை தான் பயன்படுத்தினோம்.

மட்டுமில்லாமல் அந்த வீட்டின் உரிமையாளர்கள் சிலரும் அங்கே இருந்தார்கள். அங்கே ஒரு வயதான முதியவரும், ஒரு பாட்டியும் இருந்தார்கள். அவருடைய மகனும் அங்கே தான் இருந்தார்.

அனைவருமே ஒரே கழிவறை தான் பயன்படுத்தினோம். சில நாட்களில் என்னுடைய பிறப்பு உறுப்பில் மாற்றம் ஏற்பட்டது. இது குறித்து மருத்துவரை அணுகும் பொழுது அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

இப்படி பொதுவாக இருக்கும் ஒரு கழிப்பறையை பயன்படுத்தி தான் அதற்கு காரணம் எனவும் கூறினார். ஒரு வேலை நான் கவனிக்காமல் விட்டிருந்தால்.. இது பெரிய சிக்கலாகி இருக்கும்.. படப்பிடிப்பு வெளியே படப்பிடிப்பு தளங்களுக்கு செல்லும் நடிகைகளுக்கு முறையான கழிவறை வசதி சுத்தமான சுகாதாரமான கழிவறை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை படக்குழு உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்து இருக்கிறார் நடிகை ராதிகா பிரீத்தி.

இப்படியான காரணங்களால் தான் நான் சீரியலை விட்டு விலகி விட்டேன் எனவும் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version