இரண்டாம் கணவர் மறைந்த மர்மம்.. ராஜபக்சே அன்பு.. பல கோடி இலங்கை சொத்து..! – ஷாக் கொடுக்கும் ராதிகாவின் மறு பக்கம்..!

நடிகை ராதிகா பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதா அவர்களின் மூன்றாவது மனைவியான கீதாவின் மூத்த மகள்.

நடிகை ராதிகாவின் அம்மா கீதா ஒரு இலங்கைத் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சிங்கள மொழி நன்றாகவே தெரியும். நடிகர் எம் ஆர் ராதாவை காதலித்து அவருக்கு மூன்றாவது மனைவியாக வந்தார் கீதா.

நடிகை ராதிகாவிற்கு ஒரு சகோதரி மற்றும் ஒரு சகோதரன் இருக்கிறார். ராதிகாவின் சகோதரி நிரோஷா சினிமாவில் நடிகையாக பிரபலமானவர். ராதிகாவின் தம்பி ராதா மோகன் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பிரபலமாக இருக்கிறார்.

சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை ராதிகா பிரபல நடிகர் பிரதாப் போத்தான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரதாப் போத்தன் வெறும் நடிகர் என்பதை தாண்டி கேரளாவில் மிகப்பெரிய கோடீஸ்வரர்.

பிறவிலேயே பல கோடிகளுக்கு அதிபதியானவர் பிரதாப் போத்தன். அவரை திருமணம் செய்து கொண்ட நடிகை ராதிகா பல்வேறு கருத்து முரண்பாடுகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படுவதன் காரணமாக அவரை விவாகரத்து செய்தார்.

இருவருக்கும் குழந்தை பாக்கியம் இல்லை. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை ராதிகா லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த இலங்கை தமிழர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அவருடைய பெயர் ரிச்சர்ட் ஹார்டி.

ராதிகா மற்றும் ரிச்சர்ட் ஹார்டி தம்பதிக்கு ரேயான் என்ற ஒரு மகள் இருக்கிறார். இவர் கிரிக்கெட் வீரர் Abhimanyu Mithun என்ற ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நடிகை ராதிகா தன்னுடைய இரண்டாவது கணவர் ரிச்சர்ட் ஹார்டியை விவாகரத்து செய்தாரா..? இல்லையா..? இரண்டாவது கணவரின் நிலை என்ன ஆனது..? அவர் உயிருடன் இருக்கிறாரா..? இல்லையா..? எங்கே இருக்கிறார்..? எப்படி இருக்கிறார்..? என்று எந்த விபரமும் தெரியாமல் மறைந்து போய்விட்டார்.

தாய் கீதாவுடன் நடிகை ராதிகா

இன்று வரை இந்த விஷயம் மர்மமாகவே இருக்கிறது. நடிகை ராதிகாவும் இது பற்றி வெளியே எதுவும் பேசியது கிடையாது. ஆனால் தன்னுடைய இரண்டாவது கணவர் ரிச்சர்ட் ஹார்டின் மூலமாக மனைவி என்ற அடிப்படையில் இலங்கையில் பல கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு அதிபதியாகி இருக்கிறார் நடிகர் ராதிகா.

தற்போதும் அந்த சொத்துக்களை ராதிகா தான் நிர்வகித்து வருகிறார் என்று தெரிகிறது. அதன் பிறகு பிரபல நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் சரத்குமார் ராதிகாவை கரம் பிடிக்கும் வரை பல்வேறு நடிகைகளை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.

குழந்தை பருவத்தில் ராதிகா நிரோஷா

குறிப்பாக நடிகைகள் குஷ்பூ, மீனா போன்ற அந்த காலகட்டத்தில் முன்னணியில் இருந்த நடிகைகளை திருமணம் செய்து கொள்ள பல்வேறு முயற்சிகள் எடுத்திருக்கிறார். பெண்கள் மீது அதீத ஈர்ப்புடன் இருந்திருக்கிறார்.

ஆனால் நடிகர் ராதிகாவை திருமணம் செய்து கொண்ட பிறகு ஏக பத்தினி விரதனாக இருந்து வருகிறார் நடிகர் சரத்குமார். ஏற்கனவே சாயா என்பவரை திருமணம் செய்து கொண்ட சரத்குமார் வரலட்சுமி என்ற ஒரு மகளையும் பெற்றார். அவர் தற்போது நடிகையாக சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ராதிகாவை திருமணம் செய்த பிறகு எந்த ஒரு பெரிய கெட்டபொயரும் இல்லாமல் அரசியல், சினிமா என இரண்டு தளங்களிலும் பிஸியாக பயணித்து வருகிறார் நடிகர் சரத்குமார். இது ஒரு பக்கம் இருந்தாலும் இலங்கை உடனான உறவு என்பது நடிகர் ராதிகாவுக்கு மிகவும் நெருக்கமாக மிகவும் வலுவாக இருக்கிறது.

ஏனென்றால் அவருடைய கோடிக்கணக்கான சொத்துக்கள் இலங்கையில் இருக்கின்றன. அதற்கும் ஒரு படி மேலே இலங்கையின் அதிபர் ராஜபக்சே மற்றும் அவருடைய குடும்பத்துடன் நெருக்கமான நட்பில் இருக்கிறார் நடிகை ராதிகா என்று கூறுகிறார்கள்.

தற்போது கூட இலங்கைக்கு எப்போது வேண்டுமானாலும் சென்று வரக்கூடிய ராஜ விருந்தினர் என்ற ஒரு அங்கீகாரம் நடிகை ராதிகாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அவர் எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு சென்று வரலாம் என்ற ஒரு சிறப்பு அனுமதியை ராஜபக்சே ராதிகாவிற்கு கொடுத்திருக்கிறார். இப்படியான ராதிகா குறித்து பலரும் அறியாத தகவல்களை பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் போட்டு உடைத்து இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version