கேப்டன் மகனுக்காக நான் இதை செய்யவும் தயார்..! ராகவா லாரன்ஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!

சமீபத்தில் நடிகர் விஜயகாந்தின் நினைவிடத்தில், தன் தாயாருடன் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் மற்றும் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். பிறகு சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கும் அவர்கள் சென்று உள்ளனர். பிரேமலதா, விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன், சுதீஷ் உள்ளிட்டோரிடம் துக்கம் விசாரித்து வந்துள்ளனர்.

அதன்பின் இரு தினங்கள் கழித்து, இன்று ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தமிழ் சினிமாவில் பலரது வளர்ச்சிக்கு விஜயகாந்த் உதவியவர். பல நல்ல தர்ம காரியங்களை செய்தவர். அவரது பிள்ளைகள் வளர வேண்டும். அதை நாம் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஏனென்றால், அப்போதுதான் அவர் மீது நாம் கொண்ட அன்பின் வெளிப்பாடாக அது அமையும். அவரது ஆத்மாவும் சாந்தியடையும். என்னை பொருத்தவரை சண்முக பாண்டியன் நடித்து வரும் படம் ரிலீஸ் ஆகும்போது பெரிய ஓப்பனிங், பப்ளிசிட்டி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

அதற்காக அவர் நடித்துவரும் படத்தில் டான்ஸ், பைட், சீன் என எதுவாக இருந்தாலும் கெஸ்ட் ரோல் பண்ணித் தர தயாராக இருக்கிறேன். அந்த படக்குழு என்ன ஆசைப்படுகிறேதோ, அதை நான் செய்து தருகிறேன். அவர்கள் விரும்பும் காட்சியில் நான் நடித்து தருகிறேன்.

அதுமட்டுமின்றி, இரட்டை ஹீரோ சப்ஜெக்ட் இருந்தாலும், அதில் நான் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனோடு இரண்டு ஹீரோக்களில் ஒருவனாக நடிக்க தயாராக இருக்கிறேன். அதுபோன்ற கதை இருந்தால் யாரேனும் வந்தால் நான் நடிக்க தயார். விஜயபிரபாகரன் அரசியல் இருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துகள் என்று மாஸ்டர் ராகவா லாரன்ஸ் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Exit mobile version